“மத்திய அமைச்சர் பதவியை தூக்கி எறிந்த எல். முருகன்…” 2029 தேர்தலுக்காக பாஜக போடும் மாஸ்டர் பிளான்… தமிழக அரசியலில் அதிர வைக்கும் திருப்பம்…!!

By Devi Ramu on ஐப்பசி 29, 2026

Spread the love

2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலை தமிழகத்தில் எதிர்கொள்ளும் வகையில், பாரதிய ஜனதா கட்சியை அடிமட்ட அளவில் வலுப்படுத்தும் நோக்கத்தோடு தமது மத்திய இணை அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக எல். முருகன் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் 13-ஆம் தேதியன்று பிரதமர் மோடியிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கிய எல். முருகன், தனது முடிவு குறித்து எழும் வதரிகளுக்கும் தவறான தகவல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சாதாரணக் கூலித் தொழிலாளியின் மகனாகக் கொணூர் கிராமத்தில் பிறந்து தேசிய அளவில் உயர் பதவிகளை வகித்த தான், தற்போது பிரதமர் மோடியின் கொள்கைகளைத் தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு செல்ல முழுநேரமாகக் களமிறங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

   

மேலும், தனது ராஜினாமா குறித்துச் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அவதூறு கருத்துகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள அவர், ஆதாரமற்ற பொய்களைப் பரப்புவோர் மீது குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்படும் எனவும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.