Connect with us

CINEMA

Art class ஒன்றாக சேர்ந்து போன குஷ்பூ, சுஹாசினி , பூர்ணிமா பாக்யராஜ்… Art சூப்பரா இருக்கே… இணையத்தில் வெளியான வீடியோ….

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை குஷ்பூ. இவர் தற்பொழுது சினிமா, அரசியல் என பிஸியாக கலக்கி வருகிறார். அவரைப் போலவே நடிகை சுஹாசினி மணிரத்தினமும் தற்பொழுது சினிமாவில் பிஸியாக இயங்கி வருபவர். இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவியான இவர் ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

   

நடிகர் பாக்யராஜின் மனைவியான பூர்ணிமா பாக்யராஜும் எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இவர்கள் மூவருமே தங்களது குடும்பத்துக்காகவும் தங்களுக்காகவும் நேரத்தை செலவிடுவதில் முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.

தற்போது இவர்கள் இணைந்து ரெசின் கலை பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளனர். வண்ணங்களை பார்த்ததும் குஷ்பூ, சுகாசினி, பூர்ணிமா பாக்யராஜ் குழந்தைகளாக மாறி தங்களது கைவண்ணத்தை காட்டியுள்ளனர்.

தோழிகளுடன் சேர்ந்து அவருக்கு தோன்றிய வடிவங்களை உருவாக்கி மகிழ்ந்ததோடு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் வழங்கப்பட்ட சான்றிதழ்களையும் மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டனர். தற்பொழுது இது தொடர்பான புகைப்படங்களையும் வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். இப்புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…

Continue Reading

More in CINEMA

To Top