‘குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்’ படத்தில் நடித்த நடிகையா இது..? இப்ப எப்படி இருக்காங்க பாருங்களே..!

By Mahalakshmi on ஆனி 13, 2024

Spread the love

குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நடிகையின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சினிமாவில் நடிக்கும் பல நடிகர்கள் ஒரு சில திரைப்படங்களில் நடித்துவிட்டு பின்னர் என்ன ஆனார்கள் என்பது தெரியாமல் போய்விடும். இதற்கு காரணம் பட வாய்ப்புகள் இல்லாதாலும் புது முக நடிகைகளின் வரவால் வாய்ப்பு குறைந்து. திருமணம் குழந்தைகள் என்று செட்டிலாகி விடுகிறார்கள். அதில் ஒரு சில நடிகர், நடிகைகள் இன்றளவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பார்கள்.

   

   

அப்படிப்பட்ட ஒரு நடிகை பற்றி தான் இதில் நாம் பார்க்க போகிறோம். நயன்தாரா, திரிஷா, சமந்தா உள்ளிட்ட நடிகைகள் பல வருடங்களாக சினிமாவில் முன்னணி நடிகைகளாக திகழ்ந்து வருகிறார்கள். ஆனால் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த சில நடிகைகள் இருக்கிறார்கள். அந்த வகையில் குங்குமப்பூவும் கொஞ்சு புறாவும் என்ற திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் தனன்யா.

 

2009 ஆம் ஆண்டு ராமகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படத்தை ராஜமோகன் இயக்கியிருந்தார். எஸ்பிபி சரண் இந்த படத்தை தயாரித்திருந்தார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் அனைவருமே புது முகங்கள் தான்.

இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் தனன்யா. இந்த படத்திற்கு பிறகு இவர் என்ன ஆனார் என்பது பலருக்கும் தெரியவில்லை. சென்னையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த தனன்யா 2-ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போது தான். அந்த திரைப்படத்தில் நடித்த முதல் படத்திலேயே கதாநாயகியாக அறிமுகமான இவர் அடுத்தடுத்து ஒரு சில திரைப்படங்களில் நடித்தார்.

பின்னர் பட வாய்ப்புகள் எதுவும் வராத நிலையில் மீண்டும் தன்னுடைய மருத்துவ படிப்பை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தார். அதுமட்டுமில்லாமல் ஆரம்பத்தில் இவர் படங்களில் நடிப்பதை பெற்றோர்கள் விரும்பவில்லை. படிப்பின் விடுமுறையில் தான் படத்தில் நடித்திருந்தார். பிறகு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றவுடன் தனது மருத்துவ படிப்பை படித்து முடித்துவிட்டு தற்போது மருத்துவராக பணியாற்றி வருகின்றார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு வெயிலோடு விளையாடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இருப்பினும் அப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனால் மீண்டும் தன்னுடைய மருத்துவ துறைக்கு நகர்ந்துவிட்டார். இவருக்கு 2015 ஆம் ஆண்டு ஜியோ ஆர்யன் என்பவரிடம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு குடும்பம் குழந்தைகள் என்று வசித்து வரும் இவரின் தற்போதைய புகைப்படம் இணையதில் வைரலாகி வருகின்றது.