‘குங் ஃபூ ஹசில்’ நடிகர் யுவன் சியுங் யான் காலமானார்.. சோகத்தில் ரசிகர்கள்…!!

By Soundarya on தை 2, 2026

Spread the love

உலகப்புகழ் பெற்ற ‘குங் ஃபூ ஹசில்’ திரைப்படத்தில் நடித்த பிரபல ஹாங்காங் நடிகர் மற்றும் தற்காப்புக் கலை நிபுணரான யுவன் சியுங் யான் (69), இன்று (ஜனவரி 2, 2026) காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக குயின் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இவரது மறைவு சீனத் திரையுலகினர் மற்றும் உலகெங்கிலும் உள்ள தற்காப்புக் கலை திரைப்பட ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்காப்புக் கலைகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் முத்திரை பதித்தவர். ‘லக்கி டைமண்ட்’, ‘குங் ஃபூ வாம்பயர்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ள யுவன் சியுங் யான், ‘குங் ஃபூ ஹசில்’ படத்தில் நாயகனிடம் தற்காப்புக் கலை புத்தகத்தை விற்கும் பிச்சைக்காரர் கதாபாத்திரத்தில் நடித்து உலக அளவில் கவனம் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.