குலசை முத்தாரம்மன் தசரா விழா தோன்றிய வரலாறு என்ன தெரியுமா…? பக்தர்கள் கடவுள் வேடம் அணிவது எதற்காக…?

By admin on ஐப்பசி 12, 2024

Spread the love

இந்து மத வழிபாட்டில் மிகவும் முக்கியமானது நவராத்திரி வழிபாடு. இந்துமத பெண் தெய்வங்களை முன்னிலைப்படுத்தி இந்த ஒன்பது நாட்களும் கொலு வைத்து அம்பாளை வணங்குவர். ஒன்பது நாளின் இறுதியில் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை விஜயதசமி போன்றவை நடைபெறும். அதற்கு அடுத்ததாக பத்தாவது நாள் நடைபெறுவது தான் தசரா திருவிழா. திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்திற்கு அருகே இருக்கும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த தசரா விழா எப்படி உருவானது என்று உங்களுக்கு தெரியுமா?

   

முன்னொரு காலத்தில் வரமுனி என்ற முனிவர் இருந்தார். தவத்தில் சிறந்தவர். அவர் தவம் செய்து கொண்டிருக்கும் போது அவ்வழியே மகாமுனிவரான அகஸ்தியர் வந்திருக்கிறார். அத்தியரை பார்த்ததும் பார்க்காதபோல் ஆணவத்துடன் இருந்திருக்கிறார் வர முனிவர். இதை பார்த்த அகஸ்தியர் நீ எருமை தலையும் மனித உடலும் ஆக மாறி இறைவியால் அழிவாய் என்று சாபமிட்டார். உடனே அந்த வரமுனி மகிஷாசுரனாக மாறி முனிவர்களை கொடுமைப்படுத்தினார். உடனே முனிவர்கள் மகிஷாசுரனின் கொடுமை தாங்காமல் அன்னையை நினைத்து வேள்வி நடத்தினர். அப்போது தோன்றிய அம்பாள் 9 நாட்கள் விரதம் இருந்து பத்தாவது நாள் மகிஷாசுரனை வதம் செய்த நாள் தான் தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது.

   

தென் தமிழமுகமான திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த தசரா விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு பக்தர்கள் காளி, முருகர், குறவன், குறத்தி, அம்மன் போன்ற பல வேடங்களில் விரதம் இருந்து வேடமிட்டு செல்வர். ஒவ்வொருவரும் வேண்டுதலுக்கு தகுந்தார் போல் ஒவ்வொரு தெய்வங்களின் வேடத்தை ஏற்று வீடு வீடாக சென்று காணிக்கை பெற்று கோவிலில் காணிக்கை இடுவர்.

 

காலம் காலமாக தசரா விழா என்றாலே குலசை முத்தாரம்மன் கோவில் தான் என்பது போல வெகு விமர்சையாக இங்கு கொண்டாடப்படும். இது மட்டுமல்லாமல் திரிசூலம் அலகு குத்துவது, மொட்டை அடிப்பது, தீச்சட்டி எழுந்துவது, மகிஷாசுரனை அம்பாள் வதம் செய்யும் நிகழ்வு போன்றவை அங்கு நடைபெறும். இதனால் திருநெல்வேலி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். தசரா விழா முடிந்ததும் அம்பாளுக்கு சாந்தி பூஜை செய்வர். கெட்டவையை அழித்து நல்லவையே அம்பாள் உருவாக்குவது தான் இந்த தசரா விழாவில் நோக்கமாகும்.