7 நாட்களில் எட்டி பிடித்து மாஸ் காட்டும் குடும்பஸ்தன்… மொத்த வசூல் இத்தனை கோடியா..?

By Soundarya on தை 31, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் கவின் மற்றும் ஹரீஷ் கல்யாணத்துக்கு அடுத்ததாக நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளவர்தான் நடிகர் மணிகண்டன். சினிமாவில் இவருடைய கதை தேர்வு என்பது நன்றாக இருப்பதால் அடுத்த கட்ட உயரத்திற்கு சென்று கொண்டிருக்கின்றார். சில்லு கருப்பட்டி படத்தில் தொடங்கி ஜெய் பீம், குட் நைட் மற்றும் லவ்வர் என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துள்ள மணிகண்டனின் ஹிட் லிஸ்டில் லேட்டஸ்ட் ஆக இணைந்துள்ள திரைப்படம் தான் குடும்பஸ்தன்.

   

இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 24ஆம் தேதி வெளியான நிலையில் இந்த திரைப்படத்தை ராஜேஸ்வர் காளி சாமி இயக்கி இருந்தார். இந்த படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக சான்வி மேக்னா என்ற புதுமுக நடிகை நடித்துள்ளார். இவர்களைத் தவிர பாலாஜி சக்திவேல், குரு சோமசுந்தரம், ஜென்சன் திவாகர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். குடும்பங்கள் கொண்டாடக்கூடிய ஃபேமிலி என்டர்டைனர் திரைப்படம் ஆக குடும்பஸ்தன் திரைப்படம் உருவாகியுள்ளது.

   

 

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகின்றது. இந்நிலையில் திரைப்படம் முதல் நாள் வசூல் 1 கோடி வசூலித்துள்ளது.

2ஆவது நாளில் 2.2 கோடியும், 3ஆவது நாளில் 3.15கோடியும், 4ஆவது நாளில் 1.1கோடியும், 5ஆவது நாளில் 1கோடியும், 6வது நாளில் 0.95கோடியும் வசூலித்துள்ள நிலையில் தற்போது 7ஆவது நாளில் முன்கூட்டிய கணக்கெடுப்பின்படி 0.68 கோடி வசூலித்துள்ளது. மொத்தமாக 10.08கோடி வசூலித்துள்ளது.