குடும்பஸ்தன் பட நடிகையா இது?.. மாடர்ன் லுக்கில் ரசிகர்களை மயக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…!

By Nanthini on மாசி 13, 2025

Spread the love

மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமா உலகில் நடிகையாக அறிமுகமாகியுள்ளவர்தான் சான்வே மேகனா.

   

இவர் 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹைதராபாத்தில் பிறந்த நிலையில் தெலுங்கில் வெளியான பிரேம விமானம் மற்றும் புஷ்பக விமானம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

 

மணிகண்டன் நடித்த சமீபத்தில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படத்தில் இவர் நாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு அனைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றது.

குடும்பஸ்தன் திரைப்படத்தில் ஆடம்பரம் இல்லாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்த இவர் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

வெண்ணிலா கதாபாத்திரத்திற்கு இவரது இயல்பான மற்றும் ஆழமான நடிப்பு ரசிகர்களுக்கு அந்த கதாபாத்திரத்தை மறக்க முடியாததாக மாற்றியுள்ளது.

குடும்பஸ்தன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு எதிர்பாராத விதமாகத்தான் வந்தது.

ஹைதராபாத்தில் படித்துக் கொண்டிருந்த போது அவரிடம் ஏதோ ஒன்று சிறப்பாக இருப்பதை கணித்த நடிகை ஜெயசுதா இவருக்கு பெரிய வாய்ப்பை கொடுத்துள்ளார்.  அந்த தருணம் தான் இவருக்கு நடிப்பின் மீது மேலும் ஆர்வத்தை தூண்டியது. குடும்பஸ்தன் திரைப்படம் மூலம் தன்னை ஒரு நடிகையாக நிலை நிறுத்தியுள்ள இவர் நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

நடிகை ஸ்ரீதேவியை தன்னுடைய இன்ஸ்பிரேஷன் என சொல்லும் இவர் அவரைப் போலவே இயல்பான நடிப்பை திரையில் கொண்டு வர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவ்வாறு அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றார்.  அதன்படி தற்போது மாடர்ன் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.