தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனர் என்றால் அதை கேஎஸ் ரவிக்குமார் தான். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளார். அதே சமயம் இவரை சீனியர் டைரக்டர் என்று கூட கூறலாம். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்துள்ளன. இவர் தான் இயக்கும் திரைப்படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றி நடிப்பதை ஒவ்வொரு திரைப்படத்திலும் வழக்கமாக வைத்துள்ளார். இவர் முதன் முதலில் இயக்குனர் விக்ரமன் என்பவரிடம் தான் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பிறகு புரியாத புதிர் என்ற திரைப்படம் மூலம் இயக்குனராக சினிமாவுக்கு அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து நாட்டாமை, நட்புக்காக, அவ்வை சண்முகி, தெனாலி, படையப்பா, முத்து, வரலாறு உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். அதேசமயம் இவரைக்கிய படங்கள் பல பிளாக்பஸ்டர் தான். சமீப காலமாக இவர் படங்களை இயக்குவதை விட்டு நடித்து வருகின்றார். வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் மிரட்டி வருகின்றார். இந்த நிலையில் கே எஸ் ரவிக்குமார் சமீபத்தில் பிரபல youtube சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், விஜய்யை வைத்து நான் இயக்கிய ஒரே திரைப்படம் மின்சார கண்ணா. சினிமாவை பொறுத்தவரையில் வெற்றி என்பது தான் முக்கியம்.

அந்த படம் வெற்றி அடைந்திருந்தால் உடனே என்னை அழைத்து இருப்பார்கள். ஆனால் மின்சார கண்ணா திரைப்படம் ஓரளவுக்கு தான் ஓடியது. இருந்தாலும் அதன் பிறகும் கூட எஸ் எஸ் சி இயக்கிய ஒரு படத்தின் போது என்னை அழைத்தார்கள். என்னுடைய துணை இயக்குனர் ஒருவர் இயக்கிய சுறா திரைப்படத்தின் போது கூட என்னை அழைத்தார்கள். என்னால்தான் சந்தர்ப்ப சூழ்நிலையால் செல்ல முடியவில்லை. வெற்றி என்ற ஒரு வார்த்தையை மட்டும் இந்த இடத்தில் சொல்ல முடியாது. அஜித்தை வைத்து நான் இயக்கிய திரைப்படங்கள் கூட தான் வெற்றி பெற்றன ஆனால் அதன் பிறகு அவருடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. அதனைப் போல தான் விஜய்யுடனும் அந்த ஒரு படத்திற்கு பிறகு அவருடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை என கே எஸ் ரவிக்குமார் பேசி உள்ளார்.
