CINEMA
அந்த காலத்துல வந்த படங்கள்ல இது முக்கியமா இருந்துச்சு… அது இப்போதைய படங்கள்ல சுத்தமாவே இல்லை… மனம்திறந்த KR விஜயா…
KR விஜயா தமிழ் சினிமாவில் பணியாற்றிய மூத்த நடிகையும் முன்னணி நடிகையையும் ஆவார். இவரின் இயற்பெயர் தெய்வநாயகி என்பதாகும். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களும் பணிபுரிந்தவர் KR விஜயா.
ஆரம்பத்தில் எம் ஆர் ராதாவின் நாடக குழுவில் நடித்துக் கொண்டிருந்த கேஆர் விஜயா 1963ஆம் ஆண்டு கற்பகம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து கமலம், ஓடையில் நின்று, சரஸ்வதி சபதம், நீண்ட சுமங்கலி, நம் வீட்டு தெய்வம், தங்கப்பதக்கம், திரிசூலம் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார் KR விஜயா.
தெய்வநாயகி என்ற பெயருக்கு ஏற்றார் போலவே தெய்வங்களின் கதாபாத்திரங்கள் கே.ஆர். விஜயாவுக்கு கச்சிதமாக பொருந்தும். அம்மன் வேடத்தில் அவ்வளவு தெய்வ கடாட்சமாக இருப்பார் கே ஆர் விஜயா. அதனால் பலவித பக்தி படங்களான மேல்மருவத்தூர் அற்புதம், கந்தன் கருணை, மகாசக்தி மாரியம்மன் போன்ற பல பக்தி திரைப்படங்களில் நடித்துள்ளார் கே ஆர் விஜயா. தனது நடிப்பிற்காக இரண்டு தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதுகள், இரண்டு பிலிம்பேர் விருதுகள், ஒரு கேரள மாநில திரைப்பட விருது, ஒரு நந்தி விருது, நாகிரெட்டி நினைவு விருது, காங்கிரஸ் மகளிர் விருது, நட்சத்திர சாதனையாளர் விருது போன்ற பல விருதுகளை வென்றுள்ளார் கே ஆர் விஜயா.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட கே ஆர் விஜயா, பண்டைய காலத்து சினிமாவிற்கும் தற்போதைய சினிமாவிற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை பற்றி பகிர்ந்துள்ளார். அவர் கூறியது என்னவென்று இனி பார்ப்போம்.
KR விஜயா கூறியது என்னவென்றால், அந்த காலத்தில் நாங்கள் படங்கள் நடிக்கும் போது ஒரு படத்தோட கதைகளும் முழுமையாக இருக்கும். அதாவது ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அந்த குழந்தை பள்ளிக்கு செல்வது வளர்வது பூப்பெய்துவது திருமணம் நடப்பது பின்னர் அவளுக்கு குழந்தை பிறப்பது முதுமை அடைவது வரை அந்த படத்தில் முழுமையாக காட்டி இருப்பார்கள். அதில் நிறைய பேச வேண்டி இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் உள்ள படங்களில் சுத்தமா கதையே இல்ல. சும்மா ஒரு பஸ்ல ட்ராவல் பண்ற மாதிரி ஒரு மவுண்ட் ரோடு வரைக்கும், ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு போற மாதிரி உள்ள ஒரு பயணத்தை ஒரு படமாக கொண்டு வந்துடறாங்க. அது என்னமோ முழுமை அடையாத மாதிரி எனக்கு தோணும் என்று மனம் திறந்து பேசியுள்ளார் KR விஜயா.