நீங்க CM ஆனா என்ன செய்வீங்க?.. ‘உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா’ சொன்ன அசர வைத்த பதில்..

By Mahalakshmi on ஏப்ரல் 23, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்த தற்போது இளம் அரசியல்வாதியாக கலக்கி வரும் உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா ஸ்டாலின். இவர் தமிழில் சிவா மற்றும் ப்ரியா ஆனந்த் நடிப்பில் வெளிவந்த வணக்கம் சென்னை என்ற திரைப்படத்தின் மூலமாக முதன்முதலாக இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனியை வைத்து காளி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

   

பின்னர் பெரியளவு திரைப்படங்களை இயக்காமல் இருந்து வந்த இவர் சமீபத்தில் பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரியஸ் ஒன்றை இயக்கியிருந்தார். தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார் கிருத்திகா ஸ்டாலின். தமிழக முதல்வரின் மருமகளும் எம்எல்ஏ மற்றும் நடிகரின் மனைவியுமான கிருத்திகா திரை துறையில் இருந்தாலும் வீட்டில் உள்ள அனைவரையும் மிகவும் கவனமாக பார்த்து வருகிறார்.

   

 

இவரது மகன் இன்பநதி விளையாட்டு துறையில் ஆர்வம் காட்டி வருகிறார். சினிமாவில் பாடல்கள், ஆல்பம் போன்றவற்றை இயக்குவதில் பிஸியாக இருந்து வரும் கிருத்திகா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் தனது கணவர் மற்றும் வீட்டைப்பற்றி பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். தற்போது இவர்கள் குடும்பமே அரசியல் குடும்பமாக வளம் வரும் நிலையில் அடுத்ததாக நீங்கள் சிஎம் ஆனால் என்ன செய்வீர்கள் என்று தொகுப்பாளினி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த கிருத்திகா நான் சென்னையை கிளீன் சிட்டி ஆக்க வேண்டும் என்று விரும்புவேன். சென்னையை கிளீன் சிட்டி ஆக மாற்ற வேண்டும் என்பது என்னுடைய கனவு. குப்பை இல்லாத நகரமாக மாற்ற வேண்டும். நான் சூட்டிங் சென்றால் கூட பீச்சு ஓரங்களில் அவ்வளவு குப்பை கிடக்கும். எனது செட்டில் யாராவது குப்பைகளை தரையில் போட்டால் நான் அவர்களை உடனே அதை எடுத்து குப்பை தொட்டியில் போட அறிவுறுத்துவேன் என்று கூறியிருந்தார்.