2026 தேர்தல் கூட்டணி… “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு”… ஒரே போடாய் போட்ட கிருஷ்ணசாமி…!

By Nanthini on மாசி 10, 2026

Spread the love

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தனது கட்சியின் நிலைப்பாடு மற்றும் வியூகங்களைச் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று தெரிவித்த அவர், இத்தேர்தலில் தனித்துப் போட்டியிடும் எண்ணம் தங்களுக்குத் துளியும் இல்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தினார். 2026-ல் அமையும் புதிய ஆட்சியில் புதிய தமிழகம் கட்சியும் அங்கம் வகிக்க வேண்டும் என்பதே தற்போதைய பிரதான இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த முறை தனது கட்சியின் தேர்தல் வரலாற்றில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்த அவர் விரும்புகிறார். குறிப்பாக, புதிய தமிழகம் கட்சி இதுவரை தனித்தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் என்ற பிம்பத்தை உடைத்து, பொதுத் தொகுதிகளிலும் களம் காணத் தயாராக இருப்பதாக அவர் அறிவித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுருங்காமல், அதிகாரப் பகிர்வில் சரிசமமாகப் பங்கேற்று தமிழகத்தின் புதிய ஆட்சிக் கட்டிலில் தனது பங்களிப்பை உறுதி செய்வதே கிருஷ்ணசாமியின் தற்போதைய அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.