BIG BREAKING: அதிமுக கூட்டணியில் இணைகிறார்… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்….!

By Nanthini on பங்குனி 15, 2026

Spread the love

நீண்ட இழுபறி மற்றும் அரசியல் காய் நகர்த்தல்களுக்குப் பிறகு, புதிய தமிழகம் கட்சி அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.

ஏற்கனவே கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து தென்காசி தொகுதியில் போட்டியிட்ட அனுபவம் கொண்ட கிருஷ்ணசாமி, வரும் தேர்தலில் தங்களுக்கு 5 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டணி உறுதி செய்யப்படுவது, குறிப்பாகத் தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியையும், தேர்தல் களச் சூழலையும் எந்தளவுக்கு மாற்றும் என்பது அரசியல் வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.