அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியை இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுகவிற்கு கடும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிரடி கருத்துக்களை வெளியிட்டுள்ளார். “கூட்டணிக்கான கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன.
எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கத் தயார்” எனத் தெரிவித்த அவர், தனித்துப் போட்டியிடும் எண்ணம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்திய அதே வேளையில், சுமார் 100 தொகுதிகளில் போட்டியிடுவதற்குத் தன்னிடம் தகுதியான வேட்பாளர்கள் தயாராக இருப்பதாகக் கூறி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதிமுகவுடன் நீண்டகாலமாகப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், அவர் வெளிப்படுத்தியுள்ள இந்தத் நெகிழ்வுத்தன்மை மற்றும் பலப்பரிட்சை செய்யும் போக்கு, வரவிருக்கும் தேர்தலில் கூட்டணிக் கணக்குகளை மாற்றியமைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
