இயக்குனர் ஷெரிப் இயக்கத்தில் KPY பாலா ஹீரோவாக நடித்துள்ள படம் காந்தி கண்ணா.டி இந்த படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் படத்தின் விமர்சனம் குறித்து பார்க்கலாம். காந்தி மற்றும் கண்ணம்மா ஜோடி ஒரு அறுபதாம் கல்யாணத்திற்கு செல்கிறார்கள். அந்த கல்யாணத்தை பார்த்த கண்ணமாவிற்கு நமக்கும் ஒரு குழந்தை இருந்திருந்தால் இது போல் நமக்கு ஒரு திருமணம் செய்து வைத்திருப்பானே என்று காந்தியிடம் வருத்தப்படுகிறார்.
காந்தியின் உலகமே கண்ணம்மா தான். இதனால் அவருடைய ஆசையை நிறைவேற்ற முடிவு எடுக்கிறார் காந்தி. இதற்காக ஊரில் இருக்கும் தன்னுடைய சொத்தை விற்று 80 லட்சம் ரூபாய் பணம் ஏற்பாடு செய்து அந்த பணத்தை வைத்து கல்யாணத்துக்கான அனைத்து வேலைகளையும் இளம் காதல் ஜோடியான கதிர் மற்றும் கீதாவை சந்தித்து அறுபதாம் கல்யாண விழாவிற்கு ஏற்பாடு செய்யுமாறு கூறுகிறார்.
அவர்களும் அந்த வேலையை ஏற்று ஈடுபடும் போது ஒரு சிக்கல் ஏற்படுகிறது. இதனால் அறுபதாம் கல்யாணம் நடத்த முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. இந்த தடையை மீறி தான் அந்த கல்யாணம் நடந்ததா இல்லையா என்பது படத்தின் கதை . மூத்த தம்பதிகளான காந்தி கண்ணம்மா கதாபாத்திரத்தை பாலாஜி சக்திவேல், அர்ச்சனா நடித்துள்ளார்கள். இதுவரை காமெடி வேடங்களில் மட்டும் நடித்து வந்த பாலா இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். முதல் படத்திலேயே நியாயமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்துள்ளார்.
கிளைமாக்ஸ் காட்சியில் நடுரோட்டில் பாலா ஆட்டம் போடுவது கண்களில் கண்ணீர் வர வைக்கிறது. கதாநாயகியாக நமீதா கிருஷ்ணமூர்த்தி அவருக்கு கொடுக்கப்பட்ட ரோலை அழகாக சிறப்பாக செய்துள்ளார். அமுதவாணன், மதன் நிகில் ஆகியோரும் இந்த படத்தில் அருமையாக நடித்துள்ளார்கள். இசை ஒவ்வொரு காட்சியையும் தூக்கி நிறுத்துகிறது, குடும்பத்தைக் கவரும் வகையில் இந்த படம் உள்ளது, மொத்தத்தில் இந்த படம் மக்களின் முகமாக பிரதிபலிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்,
2001-ல் ரூ.50 லட்சம் கடனில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், இன்று ரூ.500 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளார். இது மக்களின் பணம்…
புதிய தொழிலில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு…
சின்னத்திரை நடிகை மன்யா ஆனந்த், நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ் தன்னை ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக தொடர்புகொண்டு, ஒப்பந்தம் செய்ய…
வெற்றிகரமான படங்களைத் தந்த இயக்குநர் மு.களஞ்சியம் நடிகர் கார்த்திக் தனது திரைப்படத்தில் நடித்தபோது கொடுத்த தொல்லைகள் குறித்துப் பேட்டி ஒன்றில்…
சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வீடியோவில், இரண்டு குழந்தைகள் ஒரு பாம்புடன் ஒரு…
உத்தரபிரதேசத்தின் பிஜ்னோரில் பாம்பு கடித்த ஒருவர், உயிருள்ள பாம்பைப் பிடித்து, சீக்கிரம் அடையாளம் காண மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, தனது…