உண்மையிலேயே மனுஷன் ஓசந்துட்டாரு.. ஒற்றை கையால் வேலை செய்து அவதிப்பட்ட நபருக்கு KPY பாலா செய்த நெகிழ வைக்கும் உதவி..!

By Nanthini on ஆடி 17, 2025

Spread the love

விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் மக்களிடம் வரவேற்பு பெற்றார். வளர்ந்து வரும் நடிகராக சில படங்களில் நடித்திருக்கிறார். சமீப காலமாக கஷ்டப்படும் மக்களுக்கு ஒடியோடி உதவும் இவரது தங்கமான குணத்தை பார்த்து, மக்கள் பாராட்டி வருகின்றனர். முதலில், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள மலைவாழ் கிராம மக்களுக்காக இலவசமான ஆம்புலன்ஸ் வாகனங்களை சொந்த பணத்தில் வாங்கிக் கொடுத்து உதவினார். அடுத்து சென்னையில் கடந்த வருடம் ஏற்பட்ட கனமழையால், வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு தனது சொந்த பணத்தில் இருந்து ரூ. 5 லட்சம் வரை எடுத்து அவர்களுக்கு உதவினார் KPY பாலா. இவ்வாறு தொடர்ந்து தினம்தோறும் பல சேவைகளை பாலா செய்து வருகிறார்.

அதாவது வயது முதிர்ந்த நபர் ஒருவர் ஒற்றை கையில் அடிபட்ட போதும் தனது குடும்பத்திற்காக மற்றொரு கையால் வேலை செய்து கஷ்டப்பட்டு வந்துள்ளார். அவரை கவனித்த பாலா தன்னால் முடிந்த பண உதவியை அவருக்கு கொடுத்து முதலில் உங்க கைய சரி பண்ணிக்கோங்க அதுக்கப்புறம் குடும்பத்தை பார்த்துக்கலாம் என்று சொல்லி அவருடைய சிகிச்சைக்காக பண உதவி கொடுத்து உதவியுள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பாலாவின் இந்த சேவைக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

   

 

   

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Balan Akassh Balaiyan Jaganathan பதிவைப் பகிர்ந்துள்ளார் (@bjbala_kpy)