மாற்றுத்திறனாளி நபருக்கு KPY பாலா செய்த நெகிழ வைக்கும் உதவி.. வைரலாகும் வீடியோ..!

By Nanthini on வைகாசி 23, 2025

Spread the love

விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் மக்களிடம் வரவேற்பு பெற்றார். வளர்ந்து வரும் நடிகராக சில படங்களில் நடித்திருக்கிறார். சமீப காலமாக கஷ்டப்படும் மக்களுக்கு ஒடியோடி உதவும் இவரது தங்கமான குணத்தை பார்த்து, மக்கள் பாராட்டி வருகின்றனர். முதலில், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள மலைவாழ் கிராம மக்களுக்காக இலவசமான ஆம்புலன்ஸ் வாகனங்களை சொந்த பணத்தில் வாங்கிக் கொடுத்து உதவினார். அடுத்து சென்னையில் கடந்த வருடம் ஏற்பட்ட கனமழையால், வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு தனது சொந்த பணத்தில் இருந்து ரூ. 5 லட்சம் வரை எடுத்து அவர்களுக்கு உதவினார் KPY பாலா.

லொள்ளு சபா நடிகர் உதயாவுக்கு பண உதவி செய்த KPY பாலா...! | Tamil Cinema News

   

அதாவது 340 குடும்பங்களுக்கு தலா ரூ. ஆயிரம் கொடுத்து உதவினார். மேலும் பல குடும்பங்களுக்கு பெட்ஷீட், பாய் தலையாணி, நைட்டீ, லுங்கி போன்றவற்றை வாங்கி தந்தார். இப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. இதில் எந்த விளம்பரமும் எனக்கு தேவையில்லை என்றும் அவர் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.  சென்னையில் பல்லாவரத்தை அடுத்துள்ள அழகாப்புதூர் பகுதியில் இலவச ஆட்டோ சேவை திட்டத்தை  தொடங்கி வைத்துள்ளார். அந்த ஆட்டோவில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், நோயாிகள், வயதானவர்கள் என வசதியற்ற மக்கள் இலவசமாக பயணிக்கலாம்.

   

Kpy Bala Playing The Lead Role In The New Film Shooting Started With Pooja | KPY பாலா ஹீரோவாக நடிக்கும் புதிய படம் இயக்குனர் யார் தெரியுமா | Movies News in Tamil

 
இப்படி ஏழை எளியோருக்கு தன்னால் முடிந்த உதவிகளை எல்லாம் செய்து வரும் பாலா தற்போது ஒரு படத்தில் நாயகனாகவும் நடிக்க உள்ளார். அது தொடர்பான அறிவிப்பு கூட போஸ்டருடன் சமீபத்தில் வந்திருந்தது. நிஜத்தில் ஹீரோவாக வாழ்ந்து கொண்டிருக்கும் பாலாவை படத்தில் ஹீரோவாக பார்க்க அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இப்படியான நிலையில் பாலா கால்களை இழந்து ஊனமுற்ற நபர் ஒருவருக்கு பிழைக்க வழி தேடி கொடுத்துள்ளார். அதாவது அவருக்கு புதிதாக கரும்பு ஜூஸ் மெஷின் ஒன்று வாங்கி கொடுத்து கடை ஒன்றையும் திறந்து வைத்துள்ளார். அது தொடர்பான வீடியோவை பாலா இணையத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அவருடைய இந்த செயலுக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Balan Akassh Balaiyan Jaganathan பதிவைப் பகிர்ந்துள்ளார் (@bjbala_kpy)