என்கிட்ட விலையுயர்ந்த கார் இல்ல…. மாசம் 20,000 இருந்தா ராஜாவா வாழ்வேன்… எமோஷனலான KPY பாலா….!!

By Soundarya on கார்த்திகை 7, 2024

Spread the love

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் பாலா தனது காமெடி மூலமாக மக்கள் அனைவரையும் சிரிக்க வைத்த பாலா தற்போது பல நெகிழ்ச்சியான சம்பவங்களை செய்து வருகிறார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு அனைவரையும் கலகலப்பாக வைத்திருந்தார்.

   

தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் இவர் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் கூட பிறருக்கு உதவி செய்ய யோசனை செய்யும் நிலையில் தான் வாங்கும் சம்பளத்தை தனக்கென வைத்துக் கொள்ளாமல் பிறருக்கு தானதர்மம் செய்து வருவதை முழு நேரமும் வேலையாக வைத்திருக்கின்றார் பாலா.

   

KPY Bala Emotional Post: லவ் யூ லாட்ஸ் உயிரே.. தன் பெயரை கையில் பச்சை  குத்திய ரசிகையை பார்த்து எமோஷ்னலான KPY பாலா! வெளியான புகைப்படம்!

 

இந்நிலையில் இவர் நியதி கடம்பியுடன் ராக்காயி என்ற வீடியோ பாடலுக்கு ஆடியுள்ளார். இதுகுறித்த பேட்டியில் பேசிய KPY பாலா, எனக்கு மாதம் 20,000 இருந்தால் மட்டுமே போதும் ராஜா மாதிரி வாழ்ந்திருவேன். நான் வாழ்க்கையை ஓட்டிவிடுவேன். மீதம் இருப்பதை என்னை சுற்றி இருப்பவர்களுக்கு கொடுப்பேன்.

அவர்களுக்காக மட்டும் தான் ஓடணும்னு நினைப்பேன். என்னிடம் லக்ஸரி கார் இல்லை. பைக் மட்டும் தான் இருக்கு. வெளியூர் போகணும்னா பஸ் ல போயிருவேன். மூன்று வேளை சாப்பாடு, அதை தாண்டி வீட்டு வாடகை அவ்வளவு தான் என்று பேசியுள்ளார்.