#image_title
கேபிஒய் பாலா, கை, கால் செயலிழந்து கஷ்டப்பட்டு வரும் காமெடி நடிகர் வெங்கல் ராவ்க்கு உதவி செய்து இருக்கின்றார். இதைப் பார்த்த பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் வடிவேலுவுடன் காமெடி கதாபாத்திரங்களில் நடித் பிரபலமானவர்தான் வெங்கல் ராவ். இவர்கள் இருவர் காம்பினேஷனில் ஏகப்பட்ட திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றது. மேலும் பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கின்றார் வெங்கல் ராவ். கடந்த சில வருடங்களாகவே அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கின்றார்.
ஆந்திராவைச் சேர்ந்த வெங்கல் ராவ் தமிழில் 30 வருடங்களுக்கு மேலாக பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார், இவர் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் தனது கை கால்கள் செயலிழந்து விட்டதாகவும் வீட்டிலேயே முடங்கி கிடப்பதாகவும் கூறியிருந்தார். அடுத்த வேலை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவித்து வருவதாக கவலையுடன் கூறியிருந்தார். இதை கேட்ட பல சினிமா பிரபலங்கள் அவருக்கு உதவ முன் வந்திருக்கிறார்கள்.
முதன் முதலாக இவரின் வீடியோவை பார்த்த சிம்பு அவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் உதவி தொகை கொடுத்திருக்கின்றார். இதைத்தொடர்ந்து பலருக்கும் உதவி செய்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்து வைத்திருக்கும் கேபிஒய் பாலா ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கின்றார். அதில் காமெடி நடிகர் வெங்கல் ராவ்க்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியிருக்கின்றார்.
இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் அவர் என்னால் முடிந்த தொகையை மருத்துவ செலவுக்காக வெங்கல் ராவ் அண்ணனுக்கு கொடுத்திருப்பதாகவும், அனைவரும் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் என்று கூறியிருந்தார். வெங்கல் ராவ் அண்ணன் திரும்ப வந்து நம் அனைவரையும் சிரிக்க வைக்க வேண்டும் என்று பாலா அந்த வீடியோவில் பேசியிருந்தார்.
இவரின் வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் பாலாவை பாராட்டி வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல் ஏகப்பட்ட நபர்களுக்கு கேபிஒய் பாலா உதவி செய்யும் வீடியோவானது அவ்வபோது வெளியாகி அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகின்றது. தமிழ் சினிமாவில் கோடி கோடியாய் சம்பாதிக்கும் நடிகர்கள் கூட உதவி செய்வதற்கு தயங்கி வரும் நிலையில் தற்போது வளர்ந்து வரும் ஒரு நடிகர் ஓடி ஓடி உதவி செய்வதை பார்த்த பலரும் பெரிய நடிகர்களை எல்லாம் திட்டி தீர்த்து வருகிறார்கள்.
பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் (LeT) இணை நிறுவனரும், ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக அந்த அமைப்பின் மிக முக்கியத் தலைவருமான அமீர்…
பெங்களூருவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது வயதான தாயை, நான்காவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த மகனின் கொடூரமான…
ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…
“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…
பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…
சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…