Categories: சினிமா

பொன்னியின் செல்வன் நடிகையுடன் நெருக்கம்.. மனைவியின் சினிமா என்ட்ரிக்கு NO.. விவாகரத்து சர்ச்சைக்கு இது தான் காரணமா..?

Spread the love

நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தி தம்பதியினரின் விவாகரத்து செய்தி தான் சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து ஜெயம் ரவி, ஆர்த்தி தரப்பிலிருந்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. பிரபல நடிகரான ஜெயம் ரவி ஜெயம் படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். முதல் படமே சூப்பர் ஹிட் ஆனதால் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு ஜெயம் ரவி ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அன்றிலிருந்து இன்று வரை ஜெயம் ரவி எங்கு சென்றாலும் தனது மனைவியை உடன் அழைத்துச் செல்வார். சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் முதல் இரவு நேர பார்ட்டி வரை எங்கு சென்றாலும் ஜெயம் ரவி தனது மனைவியுடன் செல்வார்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகைக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கிசுகிசுக்கள் வெளியானது. இதனால் ஆர்த்தி,ஜெயம் ரவி தம்பதிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கடைசியாக ஜெயம் ரவி நடித்த இறைவன், சைரன் ஆகிய படங்கள் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை.

இதனால் அவரது மார்க்கெட் சற்று சரிந்துள்ளது. ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் ஜெயம் ரவியின் சைரன் உள்ளிட்ட படங்களையும், பல சீரியல்களையும் தயாரித்து வருகிறார். தற்போது ஜெயம்ரவியின் மார்க்கெட் குறைந்ததால் அடுத்த படம் தயாரிப்பது, சம்பளம் கொடுப்பது உள்ளிட்டவை தொடர்பாக ஜெயம் ரவிக்கும் சுஜாதா விஜயகுமாருக்கும் இடையே சில மனக்கசப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆர்த்தியின் நெருங்கிய தோழியான த்ரிஷா சினிமாவில் இப்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அப்படி இருக்க தானும் தனக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என ஆர்த்தி நினைக்கிறாராம். வெளிநாட்டில் படிப்பை முடித்த ஆர்த்தி குடும்பத்தை கவனித்து வருகிறார். எனவே சினிமாவில் என்ட்ரி கொடுத்து, புது பிசினசை தொடங்கி தனக்கான அடையாளத்தை உருவாக்க வேண்டும் என ஆர்த்தி நினைத்துள்ளார்.

ஆனால் ஆர்த்தி சினிமாவிற்குள் நுழைய ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஜெயம் ரவி நடித்த ஜெயம் படம் 21 ஆண்டுகள் நிறைவானதை குறிக்கும் பொருட்டு ஆர்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில், காதல் என்னும் வார்த்தை.. அது வார்த்தை அல்ல.. வாழ்க்கை என்ற வசனம் இடம் பெற்ற போஸ்டரை வெளியிட்டு இருந்தார். சமீபத்தில் தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை ஆர்த்தி சமூக வலைதள பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார். இதனால் அவர்களது விவாகரத்து தொடர்பான செய்தி உண்மையாக இருக்குமோ என ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

 

admin

Recent Posts

தவெகவிலிருந்து விலகும் மனநிலையில் செங்கோட்டையன்…? ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்..!!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…

38 minutes ago

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

1 மணத்தியாலம் ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

1 மணத்தியாலம் ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

1 மணத்தியாலம் ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

1 மணத்தியாலம் ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago