விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் மக்களிடம் வரவேற்பு பெற்றார். வளர்ந்து வரும் நடிகராக சில படங்களில் நடித்திருக்கிறார். சமீப காலமாக கஷ்டப்படும் மக்களுக்கு ஒடியோடி உதவும் இவரது தங்கமான குணத்தை பார்த்து, மக்கள் பாராட்டி வருகின்றனர். முதலில், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள மலைவாழ் கிராம மக்களுக்காக இலவசமான ஆம்புலன்ஸ் வாகனங்களை சொந்த பணத்தில் வாங்கிக் கொடுத்து உதவினார்.
அடுத்து சென்னையில் கடந்த மாதத்தில் ஏற்பட்ட கனமழையால், வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு தனது சொந்த பணத்தில் இருந்து ரூ. 5 லட்சம் வரை எடுத்து அவர்களுக்கு உதவினார் கேபிஒய் பாலா. அதாவது 340 குடும்பங்களுக்கு தலா ரூ. ஆயிரம் கொடுத்து உதவினார். மேலும் பல குடும்பங்களுக்கு பெட்ஷீட், பாய் தலையாணி, நைட்டீ, லுங்கி போன்றவற்றை வாங்கி தந்தார். இப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. இதில் எந்த விளம்பரமும் எனக்கு தேவையில்லை என்றும் அவர் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.
இப்படி வரிசையாக தன் சம்பாதித்த மொத்த பணத்தையும் மக்களுக்கே செலவழித்து நல்ல காரியங்களை செய்து வரும் பாலா, தற்போது துவண்டு விடாமல் மீண்டும் ஒரு நல்ல காரியம் செய்து மக்களிடையே பெரும் ஆதர்வை பெற்றுள்ளார். அதாவது சில நாட்களுக்கு முன்னால் தனியார் பெட்ரோல் பங்க் சின்ன வயது ஊழியர் ஒருவர், பைக் ஒரு தடவை ஓட்ட கேட்டா செருப்பால அடிப்பேன் என்று சொல்கிறார்கள்.
தன்னால் பெட்ரோல் மட்டும் தான் போட முடியும் சொந்தமாக பைக்கு வாங்க முடியாது என்று புலம்பிய வீடியோ ஒன்று வயிரல் ஆகி வந்தது, அதை கண்ட பாலா உடனே அந்தப் பையனுக்கு சர்ப்ரை செய்யும் விதமாக, TVs ஸ்டார் சிட்டி 1.5 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை வாங்கி தந்து சர்ப்பை செய்துள்ளார். அதைக் கண்ட அந்த பையன் மனம் நெகிழ்ந்து பாலாவை கட்டி தழுவி அழுகவே ஆரம்பித்தார். இது போல் பல நல்ல காரியங்களை செய்து கொண்டே வருகிறார் பாலா.
View this post on Instagram