“திருவண்ணாமலை நிலச்சரிவு”.. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காக ஓடோடி வந்து KPY பாலா செய்த உதவி..!

By Nanthini on மார்கழி 8, 2024

Spread the love

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் பாலா தனது காமெடி மூலமாக மக்கள் அனைவரையும் சிரிக்க வைத்த பாலா தற்போது பல நெகிழ்ச்சியான சம்பவங்களை செய்து வருகிறார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு அனைவரையும் கலகலப்பாக வைத்திருந்தார். தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் இவர் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

KPY பாலா.. குடும்பத்துக்கு தலா ரூ. 1000.. மொத்தம் 2 லட்சம்.. என்னா மனுஷன்யா இவரு! - Thentamil

   

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் கூட பிறருக்கு உதவி செய்ய யோசனை செய்யும் நிலையில் தான் வாங்கும் சம்பளத்தை தனக்கென வைத்துக் கொள்ளாமல் பிறருக்கு தானதர்மம் செய்து வருவதை முழு நேரமும் வேலையாக வைத்திருக்கின்றார் பாலா. மலை கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகருக்கு தன்னால் முடிந்த உதவியை செய்தது என பாலா செய்த உதவிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

   

KPY Bala: ``ஹீரோவா மக்கள் என்னை ஏத்துக்கணும்!'- KPY பாலா | Raghava Lawrence surprised to kpy bala - Vikatan

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு லாரன்ஸ் மாற்றம் என்னும் சேவையை தொடங்கினார். இந்த சேவையில் KPY பாலா எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்தனர். அவர்கள் மட்டுமில்லாமல் சிறு வயது முதலே லாரன்ஸ்ஆல் வளர்க்கப்பட்டவர்களும் இப்போது மாற்றம் சேவையில் இணைந்து தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.அதேபோல பாலா மலைவாழ் கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

திருவண்ணாமலையை புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல் ! - Angusam News - Online News Portal about Tamilnadu

அதன்படி தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தீபமாலை மற்றும் வ உ சி மேல தெருவில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் பெரிய அளவிலான பாறைகள் உருண்டு வீடுகளின் மேல் விழுந்து பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் பலரும் சுத்தி இருந்த நிலையில் 5 குழந்தைகள் உட்பட ஏழு பேர் நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிதி உதவி அறிவித்துள்ள நிலையில் தற்போது பாலாவும் அவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து மொத்தம் நான்கு குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் 2 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இவரின் இந்த செயல் பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Balan Akassh Balaiyan Jaganathan பதிவைப் பகிர்ந்துள்ளார் (@bjbala_kpy)