Categories: CINEMA

சாலையில் வாட்டர் பாட்டில் விற்ற சிறுவனுக்கு.. மிகப்பெரிய உதவி செய்த KPY பாலா.. வைரலாகும் வீடியோ..!

சாலையில் தண்ணீர் பாட்டில் விற்றுக் கொண்டிருந்த சிறுவனுக்கு கேபிஒய் பாலா செய்த உதவி தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் கேபிஒய் பாலா. அந்த நிகழ்ச்சி மூலமாக தனக்கென ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்ட இவர் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.

பின்னர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என்று ஆரம்பித்த இவர் பெரிய பெரிய மேடை நிகழ்ச்சிகளையும் விருது வழங்கும் விழாவையும் தொகுத்து வழங்க தொடங்கினார். சின்னத்திரை மூலமாக இவருக்கு வெள்ளி திரையிலும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி ஜூங்கா, தும்பா, சிக்சர், புலிகுத்தி பாண்டி, லாபம், ஆன்ட்டி இந்தியன், நாய் சேகர், நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.

பெரிய பெரிய நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் கூட பிறருக்கு உதவி செய்வதற்கு யோசித்து வரும் நிலையில் தான் வாங்கும் சம்பளத்தை அப்படியே மற்றவர்களுக்கு உதவி செய்து வருகின்றார் கேபிஒய் பாலா. அனாதை இல்லத்தில் இருக்கும் குழந்தைகள், ஆதரவற்ற பலருக்கும் கிராமத்தில் இருப்பவர்களுக்கும் முதியோர்களுக்கும் உதவி செய்து வருகின்றார்.

தனது சொந்த செலவில் நான்கு ஆம்புலன்ஸ்களை வாங்கி கொடுத்த இவர் ஒரு பெண்ணிற்கு ஆட்டோவும் வாங்கி கொடுத்தார். இப்படி பல உதவிகளை செய்து வரும் கேபிஒய் பாலா ராகவா லாரன்ஸ் மாஸ்டருடன் இணைந்து மாற்றம் என்ற அறக்கட்டளையின் மூலமாகவும் ஏகப்பட்ட உதவிகளை செய்து வருகின்றார். இந்நிலையில் இவர் மற்றொரு சிறுவனுக்கும் உதவி செய்திருக்கின்றார்.

ரோடுகளிலும் பெட்ரோல் பங்கிலும் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்து வந்த சிறுவனை பார்த்த கேபிஒய் பாலா பள்ளிக்கு செல்வதில்லையா என்று கேட்டிருக்கின்றார். அதற்கு பதில் அளித்த சிறுவன் பள்ளிக்கு செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் இது போன்று தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்து வருவதாகவும் தனது வீட்டில் சில பணக்கஷ்டம் இருப்பதால் அதை சமாளிக்க இந்த வேலைகளை எல்லாம் செய்து வருவதாக கூறியிருந்தார். இதை கேட்டு கவலையான கேபிஒய் பாலா நேராக அந்த சிறுவனை அழைத்துக் கொண்டு வீட்டிற்க்கே சென்று பணத்தை கொடுத்து உதவி செய்து இருக்கின்றார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

முதல்ல நயன்தாரா இல்லைன்னு சொன்னாங்க இப்ப த்ரிஷாவும் இல்லையா..? அந்த நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தும் ஆர்ஜே பாலாஜி..!

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் மாசாணி அம்மன் திரைப்படத்தில் திரிஷா நடிக்க இருந்த நிலையில் தற்போது அந்த கதாபாத்திரத்தில் சமந்தா…

27 நிமிடங்கள் ago

அஜித் கொஞ்சம் கூட யோசிக்காம அதை பண்ணாரு.. நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்த நடராஜன்..!!

பிரபல நடிகரான அஜித் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று…

28 நிமிடங்கள் ago

ஷூட்டிங் ஸ்பாட்டில் குஷ்புவின் கன்னத்தை பிடித்து பிரபு சொன்ன விஷயம்.. பிரபுவா அப்படி சொன்னாரு..? அது இன்னைக்கு வரைக்கும் மாறவே இல்ல..!!

பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…

46 நிமிடங்கள் ago

உண்மைய சொல்லாம என்ன ஏமாத்திட்டீங்க… சுப்ரமணியபுரம் ஷூட்டிங்கில் சசிகுமாரிடம் அழுத ஸ்வாதி- அப்படி என்ன மறைத்தார் தெரியுமா?

2008-ம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சுப்ரமணியபுரம். மதுரை கதைகளத்தில் அழுத்தமான திரைக்கதை மூலம்…

2 மணி நேரங்கள் ago

106 வயதில் எப்படி இதெல்லாம் செய்ய முடியும்..? இந்தியன் 2 ட்ரைலரால் வெடித்த சர்ச்சை.. இயக்குனர் சங்கர் கொடுத்த விளக்கம்..!

106 வயதில் எப்படி இப்படியெல்லாம் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும் என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார். இயக்குனர்…

3 மணி நேரங்கள் ago

குட்டியான டவுசரில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை ரட்சிதா மகாலட்சுமி.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…

4 மணி நேரங்கள் ago