Categories: சினிமா

குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதம்.. KPY பாலா செய்த மிகப்பெரிய விஷயம்.. ஆனந்த கண்ணீரில் பெற்றோர்கள்.. வைரலாகும் வீடியோ..!

Spread the love

சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சி மூலமாக பிரபலமான பாலா பலருக்கும் ஓடி ஓடி உதவி செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு சிறுமிக்கு அவர் உதவி செய்திருந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்று நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் கேபிஒய் பாலா.

அந்த ஷோவுக்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க தொடங்கிய இவர் தற்போது பெரிய பெரிய நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக கலக்கி வருகின்றார். தற்போது வெள்ளித்திரையிலும் இவருக்கு நடிப்பதற்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருகின்றது. இதுவரை ஜூங்கா, தும்பா, சிக்ஸர், புலிகுத்தி பாண்டி, லாபம், அண்டி இந்தியன், நாய் சேகர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்திருக்கின்றார்.

இன்னும் சில திரைப்படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகின்றார். அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் கூட அவர் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்தாலும் தொடர்ந்து பலருக்கும் உதவி செய்து வருகின்றார். அனாதை இல்லத்தில் இருக்கும் குழந்தைகள் தொடங்கி ஆதரவற்ற பலருக்கும் உதவி செய்து வருகின்றார்.

மலை கிராம மக்கள் மற்றும் முதியோர் இல்லத்திற்கு தனது சொந்த செலவில் 4 ஆம்புலன்ஸ்களை வாங்கி கொடுத்து நெகிழ வைத்த இவர் தனக்கு கிடைக்கும் பணத்தை அனைத்தையும் தானமாக கொடுத்து வருகின்றார். தனக்கு மிஞ்சி தான் தானம் என்பார்கள் ஆனால் அதையெல்லாம் சற்று கூட யோசிக்காத பாலா தன்னிடம் இருக்கும் பணம் அனைத்தையும் பிறருக்காக கொடுத்து உதவி செய்து வருகின்றார்.

ராகவா லாரன்ஸ் மாஸ்டர் உடன் மாற்றம் அறக்கட்டளையில் கைகோர்த்து இருக்கும் பாலா அவர் மூலமாகவும் சில உதவிகளை செய்து வருகின்றார். இந்நிலையில் தற்போது ஒரு சிறுமி தற்செயலாக தலையில் சூடான எண்ணெயை ஊற்றிக் கொண்டது. அவரது தாய் தந்தையினர் எப்படியோ அந்த குழந்தையின் உயிரை காப்பாற்றினார்.

ஆனால் அவருடைய சிகிச்சைக்கு போதிய பணம் கிடைக்கவில்லை. அதனால் அவரின் அறுவை சிகிச்சைக்காக தனது சொந்த பணத்தை கொடுத்து உதவி செய்து இருக்கின்றார்.  இனிமேல் இது என் குழந்தை அடுத்த முறை பார்க்கும் போது அவரை மகிழ்ச்சியாக பார்க்க விரும்புகிறேன் என்று தெரிவித்திருந்தார் .இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Mahalakshmi

Recent Posts

அடச்சீ… நீயெல்லாம் மனுஷனா… போதையில் மனைவியைக் குத்திக்கொன்றுவிட்டு… கால் தவறி விழுந்துவிட்டார் என்று நாடகமாடிய கணவன்… கொளத்தூரில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கொளத்தூர், அன்னை சத்ய நகரைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளி சரண்ராஜ் (36), தனது மனைவி முத்துவாரியம்மாளை (38) திங்கட்கிழமை இரவு…

4 minutes ago

ஐயோ பாவம்… யாரென்று தெரியாமலேயே போன உயிர்… மின்தாக்குதல் விபத்தில் வெளிமாநிலத் தொழிலாளி பலியான சோகம்… நெஞ்சை பதறவைக்கும் CCTV காட்சி…!

மதுநாப்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சித்திக் நகர், அஞ்சையா நகர் பகுதியில் மின்தாக்குதலுக்குள்ளாகி புலம்பெயர்ந்த தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்…

9 minutes ago

அட கடவுளே… வகுப்பறையே இடிந்து விழுந்த கோரம்… தலைமேல் கவிழ்ந்த கூரையால்… அரசுப் பள்ளியில் அலறியடித்த குழந்தைகள்… நடுங்க வைக்கும் சம்பவம்…!

பாகல்கோட் தாலுகாவில் உள்ள முகலோலி தான்டா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் கூரை, மாணவர்கள் வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்தபோது திடீரென இடிந்து…

18 minutes ago

ஐயோ… தப்பு பண்ணா தப்பிக்க முடியாது… முகமூடி நபரின் வெறித்தனமான கத்திக்குத்து… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி…!

மும்பை காந்திவலி கிழக்கு லோகந்த்வாலா வளாகத்தில் விகாஸ் குட்டே என்ற இளைஞர் முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டு வந்த மர்ம நபரால்…

24 minutes ago

“அண்ணே… 16 வருசமா உன்னை எங்கெங்கோ தேடுனேன்…” ராக்கி கட்டச் சென்ற தங்கைக்கு… சாலையோரத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி…!

ரக்ஷா பந்தன் திருநாளன்று, ஒரு பெண் தன் உடன்பிறவா சகோதரனுக்கு ராக்கி கட்டுவதற்காக மிகுந்த உற்சாகத்துடன் நடந்து சென்றுகொண்டிருந்தாள். வழியில்…

45 minutes ago

2029-ல் விஜய்க்கு பிரதமர் நாற்காலியா?…. உண்மையைப் போட்டு உடைத்த காங்கிரஸ் எம்பி… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு….!

தமிழக அரசியலில் சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் எதிர்கால பிரதமர் வேட்பாளர் குறித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.…

46 minutes ago