Categories: CINEMA

‘ரியல் ஹீரோ தலைவா நீ’… இலவச ஆம்புலன்ஸை தொடர்ந்து விவசாயிகளுக்கு உதவி செய்த kpy பாலா…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர்கள் தான் பாலா மற்றும் புகழ். பாலா முதன்முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யார்?’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இவர் இந்நிகழ்ச்சியில் தனது டைமிங் காமெடி மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

இதை தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மற்றொரு நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். இந்நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் மக்களிடத்தில் வரவேற்பு பெற்றார்.இதை தொடர்ந்து சின்னத்திரையில் கலக்கிய அவர் தற்பொழுது இந்த பிரபலத்தின் மூலம் வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்துள்ளார். தற்பொழுது பல படங்களிலும் காமெடியனாக நடித்து அசத்தி வருகிறார்.

விஜய் டிவி பிரபலங்கள் பலர் அடுத்தடுத்து புது புது மாடல் கார்களை வாங்கி சமூக வலைதளங்களில் போட்டோக்களை பகிர்ந்து வருகின்றனர். புகழ், குரேஷி, மணிமேகலை, மைனா நந்தினி, சரத், டிஜே பிளாக், பூவையர் என பலரை இந்த பட்டியலில் சேர்க்கலாம். ஆனால்  சமீபத்தில் பாலா தனது பிறந்தநாளுக்கு ஒரு முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்திருந்தார்.


இதைத்தொடர்ந்து தற்பொழுது மீண்டும் ஒரு ஆம்புலன்ஸ் வாங்கியுள்ளார் பாலா. அதுவும் அதிலேயே ஐசியு வசதி கொண்ட ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி ஈரோடு அருகே உள்ள மலை வாழ் மக்களுக்கு கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ‘தான் இதற்காக யாரிடமிருந்தும் பணம் வாங்கவில்லை. என்னுடைய சொந்த பணத்தை போட்டு வாங்கி கொடுத்துள்ளேன்’ என்று கூறியிருந்தார்.

சமீபத்தில் கூட தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்தார். மேலும் இவர் தற்பொழுது தாமரைக்கரை மலை கிராமத்தை சேர்ந்த 125 விவசாயிகளுக்கு மண்வெட்டி, கடப்பாறை மற்றும் இரும்பு கூடை போன்ற வேளாண் உபகரணங்களையும் பாலா வாங்கி கொடுத்துள்ளார். தற்போது இவரின் செயலை பாராட்டி பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து  வருகின்றனர். இதோ  அந்த வீடியோ…

Begam

Recent Posts

முக ஸ்டாலின் முதல் சிபிராஜ் வரை.. களைக்கட்டிய நடிகை வரலட்சுமியின் வரவேற்பு.. வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகை வரலட்சுமி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி…

2 மணி நேரங்கள் ago

சொன்ன சொல்லை காப்பாற்றும் ராகவா லாரன்ஸ்.. விஜயகாந்த் மகனுக்காக செய்யப் போகும் மிகப்பெரிய விஷயம்..!

சண்முக பாண்டியன் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான…

4 மணி நேரங்கள் ago

சன் டிவியில் மலர் சீரியல் இருந்து விலகிய ப்ரீத்தி ஷர்மா.. தொடரிலிருந்து வெளியேறியது குறித்து அவர் போட்ட முதல் பதிவு..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

5 மணி நேரங்கள் ago

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

6 மணி நேரங்கள் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

7 மணி நேரங்கள் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

8 மணி நேரங்கள் ago