பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி மூலமாக அறிமுகம் ஆனவர் தான் பாலா. தன்னுடைய தனித்துவமான நடிப்பின் மூலமாக மக்களின் மனதில் இடம் பிடித்தார் என்று சொல்லலாம். நகைச்சுவை நிகழ்ச்சி மூலமாக பிரபலமான பாலா, விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக மாறினார். பல ரியாலிட்டி ஷோவில் காமெடி செய்து மக்களை கவர்ந்த பாலா. மேலும், விஜய் டிவியில் மிகவும் பிரபலமான மக்கள் அனைவரும் விரும்பிப்பார்க்க கூடிய ஒரு ஷோ தான் குக் வித் கோமாளி.

#image_title
இந்த நிகழ்ச்சியின் மூலமாக பாலா மக்களின் மனதில் chair போட்டு உக்கார்ந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு சில விளம்பரங்கள் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் KPY பாலா. இதை அனைத்தையும் தாண்டி உதவி என்று கேட்டல் ஓடோடி வந்து முதல் ஆளாக நிற்க கூடியவர் பாலா என்பது நமக்கு நன்கு தெரியும். பல இடங்களில் இவருடைய உதவும் காரணங்கள் தான் ஓங்கி நிற்கும். சமீபத்தில் பெய்த கனமழையில் குடும்பத்துக்கு 1000 ரூபாய் வீதம் பல குடும்பலுக்கு தந்தார் பாலா. அதோடு மட்டுமில்லாமல் பல இடங்களில் குறிப்பாக கிராம புராணங்களில் தன்னுடைய சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளார் KPY பாலா அவர்கள்.

#image_title
அதோட சமீபத்தில் கூட தன்னுடைய சொந்த செலவில் மக்கள் மருத்துவமனைக்கு நடந்து செல்ல இலவசமாக ஆட்டோ வழங்கினார். தன்னால் முடிந்த வரை எது வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாக KPY பாலா அடிக்கடி கூறுவார். அந்த வகையில் வாணியம்பாடி கிராமத்தில் ஒரு சில மலைகிராம மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் அவசரத்துக்கு மருத்துவமனைக்கு செல்ல போதிய ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் உள்ளார்கள். இதனை அறிந்த KPY பாலா அவர்கள், தற்போது தன்னுடைய சொந்த செலவில் இலவசமாக ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால். இது ஆம்புலன்ஸ் வாங்கி கொடுக்கும் 5-வது ஆம்புலன்ஸ் ஆகும். பாலாவின் இந்த செயலுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.