விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் மக்களிடம் வரவேற்பு பெற்றார். வளர்ந்து வரும் நடிகராக சில படங்களில் நடித்திருக்கிறார். சமீப காலமாக கஷ்டப்படும் மக்களுக்கு ஒடியோடி உதவும் இவரது தங்கமான குணத்தை பார்த்து, மக்கள் பாராட்டி வருகின்றனர். முதலில், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள மலைவாழ் கிராம மக்களுக்காக இலவசமான ஆம்புலன்ஸ் வாகனங்களை சொந்த பணத்தில் வாங்கிக் கொடுத்து உதவினார்.
அடுத்து சென்னையில் கடந்த மாதத்தில் ஏற்பட்ட கனமழையால், வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு தனது சொந்த பணத்தில் இருந்து ரூ. 5 லட்சம் வரை எடுத்து அவர்களுக்கு உதவினார் கேபிஒய் பாலா. அதாவது 340 குடும்பங்களுக்கு தலா ரூ. ஆயிரம் கொடுத்து உதவினார். மேலும் பல குடும்பங்களுக்கு பெட்ஷீட், பாய் தலையாணி, நைட்டீ, லுங்கி போன்றவற்றை வாங்கி தந்தார்.
இப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. இதில் எந்த விளம்பரமும் எனக்கு தேவையில்லை என்றும் அவர் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். சென்னையில் பல்லாவரத்தை அடுத்துள்ள அழகாப்புதூர் பகுதியில் இலவச ஆட்டோ சேவை திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். அந்த ஆட்டோவில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், நோயாிகள், வயதானவர்கள் என வசதியற்ற மக்கள் இலவசமாக பயணிக்கலாம்.
இப்படி உதவிகளை செய்து கொண்டே போகும் பாலா தற்போது மாற்றுத்திறனாளி நபர் ஒருவருக்கு கை சைக்கிள் வாக்கிக்கொடுத்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர்,” அந்த சகோதரருக்கு கை சைக்கிள் ஓட்டுவதில் சிரமம் இருந்தது, அதனால் எல்லா இடங்களுக்கும் செல்ல அவருக்கு ஒரு புதிய மோட்டார் நாற்காலியை வாங்கிக் கொடுத்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…
நதியாட் ரயில் நிலையத்தில் நகர்ந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர்-பிகானீர் விரைவு ரயிலில் ஏறும் போது வழுக்கி விழுந்த ஒரு பயணியை ஆர்.பி.எஃப்…