Categories: சினிமா

‘காஞ்சனா 4’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா KPY பாலா..? அவரே சொன்ன தகவல்..!

Spread the love

ராகவா லாரன்ஸ் இயக்கும் காஞ்சனா 4 திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கேபிஒய் பாலா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலமாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் கேபிஒய் பாலா. டிவி நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி தற்போது அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் ஒரு நபராக உயர்ந்து நிற்கின்றார்.

அந்த நிகழ்ச்சி மூலமாக பிரபல நகைச்சுவை நடிகராக மாறி இருக்கின்றார் பாலா. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் பல்வேறு பொது நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகின்றார். ஒரு சில திரைப்படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். அது மட்டும் இல்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பாலாவின் திறமையை மேலும் மெருகேற்றி உள்ளது.

தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் இவர் வாங்கும் சொர்ப்ப தொகையை மட்டுமே சம்பளமாக வாங்குகின்றார். அதையும் பிறருக்கு உதவி செய்து விடுகின்றார். ஐயாயிரம் சம்பளத்திலேயே பல உதவிகளை செய்து வரும் இவர் தனக்கென எதையும் மிச்சம் வைக்காமல் அனைத்தையும் மற்றவர்களுக்கு உதவி செய்வதிலேயே கழித்து வருகின்றார் பாலா.

அதுமட்டுமில்லாமல் ராகவா லாரன்ஸின் மாற்றம் என்ற சேவையில் இணைந்து அதன் மூலமாகவும் ஏகப்பட்ட பேருக்கு உதவி செய்து வருகின்றார். இந்நிலையில் இன்று ஹோட்டல் திறப்பு விழா ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக பாலா கலந்து கொண்டார். அப்போது பத்திரிக்கையாளர்களின் சில கேள்விக்கு அவர் பதில் அளித்து இருந்தார். அதில் காஞ்சனா 4 படத்தில் நீங்கள் ஏதாவது கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்களா என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த பாலா காஞ்சனா 4 படம் முதல் ஆளாக பார்க்க வேண்டும் என்று கேரக்டரில் நான் இருக்கின்றேன் என கிண்டலாக பதில் கூறினார். மேலும் காஞ்சனா 4  படத்தில் லாரன்ஸ்தான் நடிக்கிறார். நான் நடிப்பதை பற்றி அவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் பாலாவின் உதவி செய்வதை பலரும் விமர்சித்து வரும் வகையில் அதற்கு பதில் அளித்த பாலா இவர் உதவி செய்கிறானா என்ன பாக்காமல் இவன் எல்லாம் உதவி செய்கிறான்.

நாம் யாருக்காவது உதவி செய்வோம் என்று எண்ணினால் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தார். மேலும் இது போன்ற விஷயங்களை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. தனக்கு வருகிற 100 மெசேஜ்களில் 98 நல்லதாக இருக்கின்றது. அதை மட்டும் நான் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்.  என்னுடைய எண்ணம் இன்னும் பலருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதுதான் என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

Mahalakshmi

Recent Posts

“அய்யோ காப்பாத்துங்க..!” அதிவேகத்தில் வந்த கார்… நடுரோட்டில் அலறல் சத்தம்… கல்லூரி மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு கல்லூரி மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பொத்தேரியில் உள்ள தனியார்…

3 minutes ago

“அம்மா எங்கே?”… தவிக்கும் 3 பச்சிளங் குழந்தைகள்… தாயின் உயிரைக் குடித்த குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை… கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டம் கருமந்துறை அடுத்த மோதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுமதி. இவருக்கும் மாதேஸ்வரன் என்பவருக்கும் திருமணமாகி ஏற்கனவே இரண்டு குழந்தைகள்…

13 minutes ago

ஒற்றைக் காலில் 400 மீட்டர்…! ஊன்றுகோல் கூட இல்லாத ஏழ்மை… ஒரு வீடியோவால் மாறிய விதி… அரசு செய்த நெகிழ்ச்சி உதவி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ராகினி, கல்வி மீதான தனது அளப்பரிய ஆர்வத்தால்…

20 minutes ago

மாவட்ட அரசியலில் இருந்து விலகல்…. மகனுக்காக KN நேரு எடுத்த அந்த ஒரு முடிவு…. அலறும் அறிவாலயம்….!

திருச்சி திமுகவில் முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேருவின் மகனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வழங்கப்படவில்லை…

38 minutes ago

கரூர் இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்…. தவெகவுக்கு செக் வைக்க செந்தில் பாலாஜி போட்ட “சீக்ரெட்” பிளான்… காலையிலேயே பரபரப்பு..!

கரூர் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை வீழ்த்துவதற்காக திமுக மூத்த தலைவருமான செந்தில்பாலாஜி தீவிர தேர்தல் உத்திகளை வகுத்து…

41 minutes ago

ஐயோ… என் குழந்தையை காப்பாத்துங்க… பெண்ணின் அலறல் சத்தம்… நடுரோட்டில் நடந்த மிரள வைக்கும் அதிர்ச்சி சம்பவம்… பதறும் CCTV வீடியோ…!

தெருவில் தன் குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை ஒருவன் திடீரென வழிமறித்துத் துன்புறுத்தியபோது, அந்த வழியாகச் சென்றவர்கள் அதைப் பொருட்படுத்தாமல்…

1 மணத்தியாலம் ago