ரயிலில் பிச்சை எடுத்து பாடி பின்னாளில் தங்கத்தட்டில் சாப்பிடும் அளவுக்கு வளர்ந்த நடிகை.. காந்திஜியே வீடு தேடி போன சுவாரசிய சம்பவம்..!!

By Nanthini on கார்த்திகை 20, 2024

Spread the love

திரைத்துறையில் தன்னுடைய வெண்கல கணீர் குரலால் இசை உலகில் ஒரு சகாப்தத்தை உருவாக்கியவர் தான் கே.பி சுந்தராம்பாள். அவ்வையார் என்று சொன்னதும் அனைவருடைய நினைவுக்கும் வருவது இவருடைய முகம் தான். கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் என்பதன் சுருக்கம் தான் பின்னாடி கே பி சுந்தராம்பாள் என்று மாறியது. சுந்தரப் போராட்டத்திலும் ஈடுபட்ட இவர் குடும்ப வறுமை காரணமாக ரயிலில் பிச்சை எடுத்து பாடி தான் வாழ்க்கையை ஓட்டினார். அதன் பிறகு தமிழ் சினிமாவிலேயே ஒரு லட்சம் வரை சம்பளம் பெற்ற பெருமைக்குரியவர். சினிமாவிலும் பல்வேறு கச்சேரிகளிலும் பாடி தன்னுடைய இசைஞானத்தை வளர்த்து இசை உலகில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறினார்.

Queen of music world KP Sundarampal | இசை உலக ராணி கே.பி.சுந்தராம்பாள்

   

சுதந்திரப் போராட்டத்திலும் தீவிர ஈடுபாடு கொண்ட இவர் மகாத்மா காந்தி மீதும் சத்தியமூர்த்தி மீதும் அளவற்ற பற்று வைத்திருந்தார். கதர் இயக்கம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு போன்ற பல போராட்டங்களில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்தார். அது மட்டுமல்லாமல் சுதந்திர வேட்கையை தூண்டும் பல பாடல்களையும் பாடி தேசப்பற்றை வளர்த்தவர். தன்னுடைய கணவர் இறந்த பிறகு பாடுவதை நிறுத்தி இருந்த இவரை மகாத்மா காந்தியை நேரில் சென்று மீண்டும் பாடுமாரு வலியுறுத்தினார்.

   

மகாத்மா காந்திக்கு தங்கத் தட்டில் பரிமாறிய கே.பி.சுந்தராம்பாள்.. பதிலுக்கு  காந்திஜி செய்த தரமான சம்பவம்..

 

ஒருமுறை மகாத்மா காந்தி ஈரோட்டு பகுதி விடுதலைப் போராட்ட நிகழ்வில் பங்கேற்றபோது கே பி சுந்தராம்பாள் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவரை வரவேற்று அவருக்காக தங்கத்தட்டில் விருந்து பரிமாறினார் கே.பி சுந்தராம்பாள். அதுமட்டுமல்லாமல் அந்தத் தட்டை காந்திஜியிடம் கொடுத்து சுதந்திரப் போராட்ட நிதி கொடுத்தார். காந்திஜி அந்த தட்டை உடனே ஏலம் விட்டு அதில் கிடைத்த தொகையை சுதந்திரப் போராட்ட நிதியில் சேர்த்திருந்தார். இப்படி திரையுலகமே வியக்கும் ஒருவர்தான் கே.பி சுந்தராம்பாள்.