கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை குறித்து பாடிய பாடல் தான் காரணம் எனவும் பாதுகாப்பை உறுதி செய்வதில் திமுக அரசு தோல்வி அடைந்து விட்டதாகவும் அதிமுக தொழில்நுட்ப பிரிவு தலைவர் கோவை சத்யன் குற்றம் சாட்டியுள்ளார். கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பல தரப்பினரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் அதிமுக தொழில்நுட்ப பிரிவு தலைவர் கோவை சத்யன் பேசுகையில், நடிகர் விஜய் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை குறித்து பாட்டிலுக்கு 10 ரூபாய் என பாடத் தொடங்கியது தான் எல்லாவற்றிற்கும் காரணம். விஜய் இவ்வாறு பேச தொடங்கியதும் கூட்டத்தில் தயாராக இருந்த தீய சக்திகள் செருப்பை வீச தொடங்கினர். அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதுவே கூட்ட நெரிசல் கலவரமாக மாற முக்கிய காரணம் என்று நாங்கள் நினைக்கிறோம்.
கரூருக்கு விரைந்து வந்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து அறுபது உயிர்கள் பறிபோனபோது எங்கே போனார். இது போன்ற பேரிடர் காலங்களில் சரியான நடவடிக்கை எடுக்காமல் திமுக அரசு பாதுகாப்பை உறுதி செய்வதில் தோல்வி அடைந்துள்ளது. தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைமைக்கு இதுபோன்ற பிரச்சனைகளை கையாள தெரியவில்லை. இந்த சம்பவத்திலிருந்து அவர்கள் பாடம் கற்றுக் கொண்ட எதிர்காலத்தில் இது போன்ற துயர சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…