தமிழ் சினிமாவில் முந்தானை முடிச்சு திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் கோவை சரளா. அந்த படத்தில் அவருக்கு சிறிய வேடம் கொடுத்த பாக்யராஜ். அதன் பின்னர் தான் இயக்கிய சின்னவீடு திரைப்படத்தில் கதாநாயகனின் தாயார் வேடத்தில் நடிக்கவைத்தார். அப்போது கோவை சரளாவுக்கு வெறும் 17 வயதுதானாம். ஆனால் தன்னுடைய நடிப்பால் அந்த குறை தெரியாதவாறு பார்த்துக் கொண்டார்.
அதன் பின்னர் காமெடி நடிகையாக தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் நடித்து புகழ்பெற்றார் கோவை சரளா. மனோரமாவுக்குப் பிறகு கோவை சரளாதான் என்ற நிலையை தமிழ் சினிமாவில் உருவாக்கினார். காமெடி நடிகர்களான கவுண்டமணி, வடிவேலு, விவேக் ஆகியோருக்கு ஜோடியாக நடித்து பட்டையக் கிளப்பினார்.
சதி லீலாவதி படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாகவும் நடித்தார். அதன் பின்னர் தனக்கு வயதானதும் சந்தானம், யோகி பாபு வரை அனைவரோடும் நடித்தார். இதற்கிடையில் அவருக்கு தெலுங்கு சினிமாவில் இருந்து வாய்ப்பு வர அங்கு சென்ற அவர் சில ஆண்டுகள் அங்கேயே தொடர்ந்து நடிக்கும்படி ஆனது.

#image_title
தெலுங்கில் லெஜண்ட் நடிகரான பிரம்மானந்தம் அவர்களோடு பல படங்களில் இணைந்து நடித்தார். அவருடன் நடித்த அனுபவம் பற்றி பேசியுள்ள கோவை சரளா “பிரம்மானந்தம் சார் ஒரு லெஜண்ட். அவர் கூட நடிப்பது ஜாலியான அனுபவம். அவர் போல இத்தனை ஆண்டுகள் நிலைத்து நிற்கக் கூடிய காமெடியன்கள் யாரும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். தமிழில் கூட காமெடியன்ஸ் ஒரு கட்டத்துல காணாம போயிடுவாங்க. ஆனால் பிரம்மானந்தம் கவுண்டமணி காலத்துல இருந்து இப்ப வர நடிச்சுட்டேதான் இருக்கார். அவர மாதிரி லெஜண்ட் எல்லாம் இண்டஸ்ட்ரிக்குக் கிடைத்த பாக்கியம்தான்” எனக் கூறியுள்ளார்.