Connect with us

கல்யாணம் பண்ணிக்கிறவங்கள பாத்தா எனக்கு.. 62 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் கோவை சரளா ஓபன் டாக்..!

CINEMA

கல்யாணம் பண்ணிக்கிறவங்கள பாத்தா எனக்கு.. 62 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் கோவை சரளா ஓபன் டாக்..!

 

தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவை திறமையால் பல வருடங்களாக நடித்து வருபவர் நடிகை கோவை சரளா. நகைச்சுவை ஒரு மனிதனுக்கு இன்றியமையாதது. அதனால்தான் பலரும் தங்களது கவலையெல்லாம் மறந்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களின் எண்ணிக்கை என்பது மிகவும் குறைவு. பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே அதிக அளவு நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிப்பார்கள்.

   

அப்படிப்பட்ட பில்டிங்கில் மனோரமாவுக்கு அடுத்ததாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த அசதி வந்தவர் தான் கோவை சரளா. தற்போது வரை அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகின்றார். ஏன் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறித்து ஒரு பேட்டியிலும் பேசியிருக்கின்றார். கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் உள்ளிடம் பல காமெடி நடிகர்களுடன் ஜோடி போட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார் கோவை சரளா.

கரகாட்டக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்ற இவரது காமெடியும் நடனமாடும் அழகும் பலரையும் கவர்ந்தது. அதன் பிறகு வடிவேலுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து நம்மை சிரிக்க வைத்திருப்பார். அவருடன் மட்டும் இல்லாமல் காமெடி நடிகர் விவேக் உடனும் பல படங்களில் நடித்திருக்கின்றார் கோவை சரளா. எந்த காமெடி நடிகைகள் கிடைக்காத வாய்ப்பு கோவை சரளா கிடைத்தது.

கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த சதிலீலாவதி திரைப்படத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். அந்த திரைப்படத்தில் இருவரின் நடிப்பு மற்றும் காமெடி இன்றளவும் ஃபேமஸாக இருந்து வருகின்றது. காலம் மாறினாலும் காட்சிகள் மாறாது என்ற வகையில் கோவை சரளா தற்போதும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். இந்த வயதிலும் நகைச்சுவை திறமையை காட்டி வரும் இவர் கடைசியாக அரண்மனை 4  திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

மேலும் அடுத்ததாக கங்குவா திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்து இருந்தார். அதில் பிறக்கும் போது தனியாக வந்தோம். இறக்கும்போதும் தனியாக தான் போகப்போகிறோம். இடையில் இந்த உறவுகள் எனக்கு தேவையில்லை, சிறுவயதில் இருந்து எனக்குள் ஒரு ஆன்மீகம் இருந்திருக்கின்றது.

அது நாள்பட்ட பிறகுதான் எனக்கு தெரிய வந்தது. அதனால் நான் அதில் கவனம் செலுத்தி வருகின்றேன். சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு பல பெற்றோர்கள் அந்த குழந்தைகளால் கைவிடப்பட்டு தனியாக நிற்பதை பார்க்கிறேன். நான் யாரையும் சார்ந்து வாழ விரும்பவில்லை என்று கூறி இருந்தார்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top