CINEMA
வினோத் ராஜின் வித்யாசமான முயற்சி.. பாண்டியாக வெற்றி பெற்றாரா சூரி..? கொட்டுக்காளி படத்தின் விமர்சனம்..!!
காமெடியனாக தனது பயணத்தை ஆரம்பித்து இப்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சூரி. முன்னணி நடிகர்களுடன் இணைந்து சூரி ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அவரது காமெடிக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன விடுதலை படத்தின் மூலம் சூரி ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சூரியின் கருடன் திரைப்படமும் ரிலீஸ்ஆகி அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் கூழாங்கல் பட இயக்குனர் பி.எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்த கொட்டுக்காளி திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. கொட்டுக்காளி திரைப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அன்னா பென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெர்லின் உள்ளிட்ட பல நாடுகளில் கொட்டுக்காளி திரைப்படம் திரையிடப்பட்டு பல விருதுகளை வென்றுள்ளது.
இயக்குனர் படத்தில் கதை ஓட்டத்தில் கிடைக்கும் சத்தங்களை வைத்து கொண்டு சென்றுள்ளனர். இயக்குனர் ஆணாதிக்க உலகில் பெண்களின் நிலைப்பாடு, சமூகத்தின் நிலை ஆகியவற்றை உணர்வுபூர்வமாக கூறியிருக்கிறார். சூரி பாண்டி கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தொண்டை கட்டிய குரலில் பேசுவதும் ஹீரோயின் முதல் குடும்பத்தினர் அனைவரையும் அடித்து வெளுப்பதும் என ஒரு நடிகராகவும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
அண்ணா பென் வசனமே இல்லாமல் முக பாவனைகள் மூலம் அவர் நினைப்பதை புரிய வைத்திருக்கிறார். அன்னா பென் தன்னை சுற்றி நடக்கும் அநியாயத்திற்கு எதிராக அமைதி போராட்டமாக தான் அவரது கதாபாத்திரம் நகர்ந்து செல்கிறது. மற்ற துணை கதாபாத்திரங்களும் படத்தில் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். படத்தில் பாராட்ட வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்கிறது. ஆனால் ஒரு சில காட்சிகள் நீளமாகவும், சில காட்சிகள் இன்னும் அழுத்தமாகவும் சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் எழுகிறது. எது எப்படியோ மொத்தத்தில் கொட்டுக்காளி திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்.