காமெடியனாக தனது பயணத்தை ஆரம்பித்து இப்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சூரி. முன்னணி நடிகர்களுடன் இணைந்து சூரி ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அவரது காமெடிக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன விடுதலை படத்தின் மூலம் சூரி ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார்.
அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சூரியின் கருடன் திரைப்படமும் ரிலீஸ் ஆனது. இந்த படத்திலும் அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இயக்குனர் பி.எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகும் கொட்டுக்காளி திரைப்படத்தில் ஹீரோவாக சூரி நடித்துள்ளார். இயக்குனர் வினோத் ராஜ் ஏற்கனவே கூழாங்கல் என்ற படத்தை இயக்கினார்.
தற்போது சூரியை வைத்து கொட்டுக்காளி படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அன்னா பென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் எஸ்.கே ப்ரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஆரம்பத்தில் இருந்து ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கண்டிப்பாக கொட்டுக்காளி திரைப்படம் சூரியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். கடந்த சில நாட்களுக்கு முன்பு 74-ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரைப்படமும் திரையிட தேர்வானது குறிப்பிடத்தக்கதாகும். கொட்டுக்காளி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 23-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சற்று முன் கொட்டுக்காளி பட டிரெய்லர் ரிலீஸ் ஆனது. அந்த வீடியோ..
