கொளத்தூரில் திமுகவிற்கு மக்கள் கொத்து பரோட்டா போட்டுவிட்டனர் என கரூரில் முதலமைச்சர் விஜய் பேசிய பேச்சு, அரசியல் வட்டாரத்திலும் சமூக ஊடகங்களிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தவெக தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான விஜய்யின் இந்த கருத்துக்கு, பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையான கண்டனங்களையும் விமர்சனங்களையும் பதிவு செய்து வருகிறார். விஜய் இன்னும் சினிமா பாணியிலேயே பேசி வருவதாக எதிர்க்கட்சியினரும் விமர்சித்து வருகின்றனர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட பதிவில், “தவெகவை துறைமுகம் தொகுதியில் தூள் பக்கோடா போட்டு, சேப்பாக்கத்தில் சேமியா பாயாசம் போட்டதே திமுக தான்; அதைப்பற்றி பேசமாட்டீர்களா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 126 தொகுதிகளில் தவெக தோல்வி அடைந்திருப்பதைக் சுட்டிக்காட்டி, அங்கும் மக்கள் தவெகவிற்கு போட்டது கொத்து பரோட்டா தான் என்று அவர் மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
ப்ளூ சட்டை மாறனின் இந்த தொடர் பதிவுகளுக்கு தவெக தொண்டர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் தீவிரமாகப் பதிலடி கொடுத்து வருகின்றனர். சென்னையை கோட்டையாக வைத்திருந்த திமுகவிடமிருந்து, தவெக தனது முதல் தேர்தலிலேயே பல இடங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில், மாறன் சில தொகுதிகளை மட்டுமே குறிப்பிட்டுப் பேசுவது வேடிக்கையாக உள்ளது என அவர்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும், மக்கள் மத்தியில் நேரடித் தொடர்பில் இருப்பதற்காகவே முதலமைச்சர் விஜய் இப்படிப் பேசுகிறார் என்றும் அவரது ஆதரவாளர்கள் நியாயப்படுத்தி வருகின்றனர்.
