actor Kool Suresh

தயவுசெஞ்சு நீங்க இனி அதை பண்ணாதீங்க… தவெக தலைவர் விஜய் குறித்து ஆவேசமாக பேசிய காமெடி நடிகர் கூல் சுரேஷ்!

By Elango on மாசி 15, 2026

Spread the love

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் கூல் சுரேஷ். சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் போட்டியாளராக கலந்துக்கொண்டார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய காமெடி நடிகர் கூல் சுரேஷ் கூறியதாவது, தவெக கட்சியோட ஒரு மீட்டிங் சேலத்தில் நடக்குது. விஜய் சார் உங்ககிட்ட ஒரு வேண்டுகோள். நீங்க மீட்டிங் நடந்துங்க. வேண்டாம்ன்னு சொல்லலே. ஆனா அதை வெள்ளிக்கிழமை அன்னிக்கு நடத்தாதீங்க.

இன்னைக்கு வெள்ளிக்கிழமை 10 12 படம் ரிலீஸ் ஆயிருக்கு. நீங்க ஒரு நடிகர். உங்களுக்கு தெரியும். அந்த புரடியூசரோட வலி என்ன? இயக்குனரோட வலி என்ன என்பது. நீங்க வெள்ளிக்கிழமை மீட்டிங் நடத்துனா சோஷியல் மீடியா ஃபுல்லா விஜய் வீட்டை விட்டு வெளியே வந்துட்டார். விஜய் கார்ல ஏறிட்டார். விஜய் பிளைட்டுல ஏறீட்டாருன்னு இந்த நியூஸ்தான் சோஷியல் மீடியா முழுக்க வந்துட்டு இருக்குது.

   

அப்போ இன்னிக்கு தியேட்டர்ல வெளியான இந்த 10 12 படங்களோட நிலைமை என்ன ஆவறது? அதனால் விஜய் சார், உங்ககிட்ட ஒரு தாழ்மையான வேண்டுகோள். ஒரு தாயுள்ளதோடு இனிமேல் நீங்க எந்த ஒரு மீட்டிங் நடத்தினாலும் அதை வெள்ளிக்கிழமை அன்னிக்கு நடத்தாதீங்க என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.