கருப்பு கமலஹாசன் நீங்க… அந்த கருமத்தை மட்டும் விடுங்க.. விஜய் சேதுபதிக்கு கோரிக்கை வைத்த கூல் சுரேஷ்..!

By Soundarya on மார்கழி 20, 2024

Spread the love

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடுதலை2. இந்த படம் இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் விமர்சனம் குறித்து பார்க்கலாம். விஜய் சேதுபதி ஹீரோவாகவும் சூரி கதையின் நாயகனாகவும் நடித்த திரைப்படம் தான் விடுதலை.

   

இந்த படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் ரிலீஸ் ஆகி பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து இரண்டாம் பாகத்தை சுமார் ஒன்றரை வருட கடின உழைப்புக்கு பிறகு இன்று திரைக்கு வந்திருக்கிறது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சுவாரியார் நடித்துள்ளார். வேல்ராஜ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

   

 

இசைஞானி இளையராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று உலகம் எங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. படம் குறித்து பல நேர்மறையான விமர்சனங்கள் வந்து குவிகிறது. வெற்றிமாறனுக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த நடிகர் கூல் சுரேஷ், கருப்பு கமலஹாசன் நீங்க. என்னம்மா நடிச்சிருக்கீங்க. அந்த பிக்பாஸ் கருமத்தை ஏன் தொகுத்து வாங்குறீங்க. அந்த கருமத்தை விட்ருங்க என்று பயங்கர ஆக்ரோஷமாக பேசியுள்ளார்.