“தலைவா.. நாங்க இருக்கோம்…!” தணிக்கை சிக்கலில் ‘ஜனநாயகன்’…. விஜய்க்கு ஆதரவாகத் திரண்ட கோலிவுட்…!!

By Devi Ramu on தை 8, 2026

Spread the love

நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல்களால், திட்டமிட்டபடி நாளை வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஜனவரி 9-ஆம் தேதிதான் வரவுள்ளதால், தயாரிப்பு நிறுவனம் படத்தின் ரிலீஸை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது. அரசியலில் கால்பதிக்கும் முன் வெளியாகும் கடைசிப் படம் என்பதால், இந்தத் தாமதம் அவரது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நெருக்கடியான சூழலில், ரத்னகுமார், சிபிராஜ் போன்ற பல திரையுலகப் பிரபலங்கள் விஜய்க்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். “சவால்களைக் கடந்து நீங்கள் மீண்டு வருவீர்கள்” எனத் திரையுலகினர் ஊக்கமளிப்பதோடு, அரசியல் பின்னணி காரணமாகவே தணிக்கை கெடுபிடிகள் அதிகமாக இருப்பதாகக் கருத்துகள் எழுந்துள்ளன. ரிலீஸ் தள்ளிப்போனாலும், ஒட்டுமொத்த கோலிவுட் பட்டாளமும் விஜய்யின் பின்னால் உறுதுணையாக நிற்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.