“சேகர் பாபுவே காரணம்”…. கொளத்தூர் பொறுப்பில் இருந்து அவுட்?….. ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவால் அலறும் அறிவாலயம்….!

By Nanthini on ஆவணி 29, 2026

Spread the love

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பெற்ற எதிர்பாராத தோல்விக்குப் பிறகு, அமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவரக் கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவின் உட்கட்சி மறுகட்டமைப்பின் ஒரு பகுதியாக, சென்னை அமைப்பில் செய்யப்பட்ட மாற்றங்களின்படி, முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபுவின் கட்டுப்பாட்டில் இருந்த சென்னை கிழக்கு மாவட்ட எல்லையிலிருந்து கொளத்தூர் பிரிக்கப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘சென்னை வடக்கு’ மாவட்ட எல்லைக்குள் கொளத்தூர் மற்றும் பெரம்பூர் தொகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இதனால் சென்னை வடக்கு மாவட்டத்திற்குப் புதிய மாவட்டச் செயலாளர் ஒருவரை நியமிக்கக் கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளதால், கொளத்தூர் தொகுதிக்கானப் பொறுப்பிலிருந்து சேகர்பாபு விடுக்கப்படுகிறார். கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றதற்குச் சேகர்பாபுவின் களப் பணிக் குறைபாடே முக்கியக் காரணம் என உள்கட்சியினரிடையே கடுமையான விமர்சனங்கள் எழுந்துவந்த சூழலில், இந்த எல்லை மாற்றமும் புதிய மாவட்டச் செயலாளர் நியமனமும் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.