இந்த வருடம் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு ஆர்.சி.பி. அணி வெற்றி பெற்றதையடுத்து கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி அந்த அணி வீரர்களுக்கு பாராட்டு விழாவானது சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்தார்கள். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் பலியானார்கள். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது, “ஆர்சிபி அணி வரலாற்றில் சந்தோஷம் நிறைந்ததாக இருக்க வேண்டிய நாள். துக்கம் நிறைந்ததாக மாறியது. கொண்டாட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காகவும், காயம் அடைந்தவர்களுக்காகவும் நான் தினமும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். இந்த இழப்பு எங்கள் கதையின் ஒரு அங்கமாகிவிட்டது. அன்பு, அக்கறை, மரியாதையுடன் ஒன்றிணைந்து முன்னோக்கி செல்வோம் என்று கூறியுள்ளார்.
