தமிழ் திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக இருந்தவர் தான் நடிகர் விக்னேஷ். இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான சின்னத்தாகி என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன்படி கிழக்குச் சீமையிலே, காதலி, ராமன் அப்துல்லா, வேலை, அப்பு, என்னை தாலாட்ட வருவாளா, சூரி மற்றும் ஆச்சார்யா (திரைப்படம்) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். பாலா இயக்கத்தில் சேது திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றார். மேலும் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியதும் இவர் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.

இப்படியான நிலையில் விக்னேஷ் சமீபத்தில் நடித்த பேட்டியில் தனது சினிமாவில் நடந்த அவமானம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், முதல் முதலில் பாலு மகேந்திரன் சார்தான் என்னை வண்ண வண்ண பூக்கள் படத்தில் நடிக்க ஓகே என்று சொன்னார். நான்கு வருட போராட்டங்களுக்கு பிறகு தான் எனக்கு வண்ண வண்ண பூக்கள் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது படபிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் அர்ச்சனா மேடம் காரில் வந்து இறங்கி சில பொருட்களை பாலு சார் கிட்ட கொடுத்துட்டு பாலு ஆல் த பெஸ்ட் நல்லா பண்ணுங்க என்று சொல்லி வாழ்த்தினார்கள்.

அதேசமயம் அந்தப் படத்தில் பிரசாந்தை தவிர்த்து இரண்டாவது ஹீரோவாக நடிக்க என்னை தேர்வு செய்திருந்த சமயத்தில் அர்ச்சனா மேடம் வேறு ஒரு நடிகரை போடுங்க என்று சொன்னாங்க. அவங்களுக்கு தெரிந்த பையன் என்பதால் இரண்டு பேரும் புது முகம்தான் இவனையே போடுங்க என்று சொல்லி பாலு சார் கிட்ட பேசினாங்க. பாலு மகேந்திரன் சார் போட முடியாது என்று சொன்னதும் இருவருக்கும் பெரிய சண்டையே வந்தது. அதன் பிறகு ஒரு கட்டத்தில் என்னை சமாதானப்படுத்தி அடுத்த படம் பண்ணலாம் என்று பாலு சார் சொல்லி அனுப்பி வச்சிட்டாரு. அது எனக்கு மிகப் பெரிய மன உளைச்சடை தந்தது மட்டுமல்லாமல் பெரிய அவமானமாகவும் இருந்தது.

அதையெல்லாம் என்றுமே என்னால் மறக்கவே முடியாது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மனதை தேற்றிக்கொண்டு படங்களில் நடிக்க ஆரம்பித்தேன் என்று விக்னேஷ் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் விக்னேஷ் பல சமூக சேவைகளை செய்து வரும் நிலையில் ஒரு கிராமத்தை தத்தெடுத்து தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருவதாகவும் அதற்காக தனக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டதாகவும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
