ராஜஸ்தான் மாநிலத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ தடையாக இருந்த கணவரை, புதுப்பெண் ஒருவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கங்காநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷிஷ் (25) மற்றும் அஞ்சலி தம்பதியினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், அஞ்சலிக்கு திருமணத்திற்கு முன்பே சஞ்சய் என்பவருடன் காதல் இருந்துள்ளது. திருமணத்திற்குப் பின்னரும் இந்தத் தொடர்பைத் தொடர்ந்த அஞ்சலி, தனது கள்ளக்காதலுக்கு கணவர் இடையூறாக இருப்பதாகக் கருதி அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டார்.
கடந்த ஜனவரி 31-ம் தேதி, அஞ்சலி தனது கணவர் ஆஷிஷை அதிகாலை நடைப்பயிற்சிக்காக வெளியே அழைத்துச் சென்றுள்ளார். ஏற்கனவே திட்டமிட்டபடி, அஞ்சலியின் கள்ளக்காதலன் சஞ்சய் மற்றும் அவரது நண்பர்களான ரோஹித், சித்தார்த் ஆகியோர் ஒரு புதருக்குப் பின்னால் மறைந்திருந்தனர். ஆஷிஷ் அங்கு வந்தவுடன், சஞ்சய் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ஆஷிஷை இரும்பு கம்பியால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். பின்னர், மயங்கிய நிலையில் இருந்த ஆஷிஷின் கழுத்தை மப்ளரால் நெரித்துக் கொலை செய்தனர்.
கொலைக்குப் பிறகு போலீசாரின் பார்வையைத் திசைதிருப்ப அஞ்சலி ஒரு கிரிமினல் நாடகத்தை அரங்கேற்றினார். ஆஷிஷின் நகை மற்றும் செல்போனை சஞ்சயிடம் கொடுத்துவிட்டு, ஒரு கார் தங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாகவும், அடையாளம் தெரியாத நபர்கள் நகைகளைத் திருடிச் சென்றதாகவும் கூறி மயங்கி விழுந்தது போல நடித்தார். தொடக்கத்தில் இது ஒரு சாலை விபத்து மற்றும் கொள்ளை முயற்சி என்று நம்பப்பட்டாலும், ஆஷிஷின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது.
போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அஞ்சலி முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால் சந்தேகம் வலுத்தது. தீவிர விசாரணையில், அவர் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஆஷிஷைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக அஞ்சலி, அவரது கள்ளக்காதலன் சஞ்சய் மற்றும் கொலையில் உதவிய இரண்டு நண்பர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குருகிராமில் 25 வயது இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, உயிருக்குப் போராடும் நிலையில் அவரது வீட்டு வாசலிலேயே வீசப்பட்ட சம்பவம்…
அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள புரூக்ளின் பகுதியில் நிகழ்ந்த கோர விபத்து ஒன்றில், பழமையான மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில்…
சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…
செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…
இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…