“பாடலுக்கு ஆட வைக்கலாம்…” ஆபாசமாக பதிவிட்ட நபர்… தரமான பதிலடி கொடுத்த குஷ்பு…!!

By Devi Ramu on கார்த்திகை 14, 2025

Spread the love

கமல்ஹாசன் தயாரிப்பில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவிருந்த ‘தலைவர் 173’ திரைப்படத்திலிருந்து இயக்குநர் சுந்தர்.சி திடீரென விலகிய சம்பவம், சமூக வலைதளங்களில் கேலிக்கு உள்ளாகி வருகிறது. இந்த எதிர்பாராத விலகலினால், சுந்தர்.சி மற்றும் ரஜினி மீது பல்வேறு நகைச்சுவைப் பதிவுகள் பரவின. அதில் குறிப்பாக, நடிகை குஷ்புவை இந்தச் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி ஆபாசமான கிண்டல்களும் மீம்ஸ்களும் வெளியாயின.

அந்தக் கிண்டல் பதிவுகளில், ரஜினிகாந்த் ஒரு குத்துப்பாடலுக்கு நடிகை குஷ்புவை ஆடச் சொன்னதால்தான் சுந்தர்.சி இந்தத் திரைப்படத்திலிருந்து வெளியேறினார் என்று தவறான தகவல் பரப்பப்பட்டது. இந்தத் தகவல் அடங்கிய ஒரு பதிவுக்கு நடிகை குஷ்பு தனது எக்ஸ் (Twitter) பக்கத்தில் பதிலளித்திருப்பது தற்போது வைரலாகி வருகிறது. அந்தக் கருத்தைப் பதிவிட்ட நபரைப் பார்த்து, “இல்லை. உங்கள் வீட்டிலிருந்து யாரையாவது ஆட வைக்கலாம் என்று நினைத்தோ…” என்று கிண்டலாக குஷ்பு பதிலடி கொடுத்தார். இந்தச் சாமர்த்தியமான பதில் சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.