தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களமும் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. ஒரு பக்கம் தேர்தல் பிரச்சாரம் மறுபக்கம் கூட்டணி பேச்சு வார்த்தை என அனைத்து கட்சியினரும் தீவிரமாக அரசியல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனுடைய கரூர் விவகாரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாஜக அதிமுக மூலமாக விஜயை கூட்டணியில் இணைப்பதற்கு தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக விஜயையும் தங்கள் பக்கம் இழுத்து தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
இப்படியான நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பூ, தற்போது அக்கட்சியின் மாநில துணைத்தலைவராக செயல்பட்டு வருகின்றார். இதனிடையே சென்னை மாவட்ட பாஜக தொகுதி பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில் அந்த பட்டியலில் குஷ்புவுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி குஷ்பூ ஆயிரம் விளக்கு தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் குஷ்புவுக்கு இந்த புதிய பொறுப்பு அவருடைய அரசியல் பணியில் மேலும் ஒரு முக்கியமான மைல் கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பாலம்பட்டி மற்றும் கொடுகூர் இடையே வெறும் 500 மீட்டர் இடைவெளியில், அடுத்தடுத்து இரண்டு இளைஞர்கள் பெட்ஷீட்டில் சுற்றப்பட்டு…
மேற்கு ஆசியாவில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வரும் போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை…
தாய்க்கும் மகளுக்கும் இடையிலான பிரிக்க முடியாத உன்னதமான அன்பை உணர்த்தும் நெகிழ்ச்சியான காணொளி ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ல் பாஜக சந்தித்த படுதோல்வி, அக்கட்சிக்குள் மிகப்பெரிய உள்கட்சி மோதலை உருவாக்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் 27…
பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரத்தால் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட…
அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்கள் தற்போது புதிய உச்சத்தை எட்டியிருப்பது அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ்…