தாராபுரம் தொகுதிக்குட்பட்ட குண்டடம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய செயலாளராகச் செயல்பட்டு வந்த பன்னீர்செல்வம், அக்கட்சியிலிருந்து விலகித் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்துள்ளார். சேலத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு நேரடியாகச் சென்ற பன்னீர்செல்வம், EPS முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
அவருடன் தவெக துணை ஒன்றிய செயலாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் இரட்டை இலை முகாமிற்குச் சென்றுள்ளனர். தாராபுரம் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், களத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த தவெக நிர்வாகிகள் மொத்தமாக விலகி அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளது, அப்பகுதியில் தவெகவின் பலத்தைப் கணிசமாகக் குறைக்கும் என்றும், இது அக்கட்சிக்குக் கிடைத்த பின்னடைவு என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
