தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதே சமயம் எந்த கட்சி பலமாக இருக்கிறதோ அந்தக் கட்சியில் கூட்டணியில் இணையும் முயற்சியில் மாற்றுக் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜய்யும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் அரசியலில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் பலரும் திமுகவில் தொடர்ந்து இணைந்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
குறிப்பாக அதிமுகவிலிருந்து பலரும் தொடர்ந்து திமுகவில் இணைந்து வருகின்றன. இந்நிலையில் அதிமுகவில் இருந்து பலர் திமுகவில் இணைய உள்ளதாக அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். கொங்கு மண்டலத்தை வலுப்படுத்த திமுக பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறது. இதனிடையே செங்கோட்டை விவகாரத்தால் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளிடம் முத்துசாமி தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியான தகவலை இந்த கருத்து உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் விரைவில் ஈரோட்டில் மாபெரும் இணைப்பு விழாவுக்கு திமுக தயாராகி வருகிறதாம். இந்தச் செய்தி தற்போது இபிஸ்க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
