தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஒரு சிலர் கட்சித்தாவலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில் நாதகவில் இருந்து மாநில அளவில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் நிர்வாகிகள் விலகுவதாக அறிவித்திருக்கிறார்கள்.
இரண்டு மாதங்களுக்கு முன்பாக நாதகவில் இருந்து விலகிய பலரும் திமுக, அதிமுக, தவெகவில் இணைந்தனர். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமார், சுற்றுச் சூழல் பாசறை மாநில செயலாளர் முகமது அலி ஜின்னா, ஐ.டி. விங் மாநில ஒருங்கிணைப்பாளர் வினோத் குமார் உள்ளிட்டோர் அந்த கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.
