சர்வதேச அளவில் நிலவி வரும் போர்ப் பதற்றம் காரணமாக எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சமாளிக்க, ஒன்றிய அரசு அவசரக்கால நடவடிக்கையாக சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, பொது விநியோகத் திட்டத்தின் (PDS) கீழ் அடுத்த 60 நாட்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மீண்டும் மண்ணெண்ணெய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விநியோகம் குறிப்பாக சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், பொதுமக்களின் சமையல் மற்றும் விளக்குத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மேற்கொள்ளப்படுகிறது.
முன்னதாக ‘மண்ணெண்ணெய் இல்லா மாநிலங்கள்’ என அறிவிக்கப்பட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இந்த தற்காலிக விநியோகத்தைத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகள் மட்டுமின்றி, கூடுதல் வசதிக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில அரசால் அடையாளம் காணப்படும் 2 பொதுத்துறை பெட்ரோல் பங்க்-களிலும் பொதுமக்கள் நேரடியாக மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறையின் மூலம் சுமார் 48,000 கிலோ லிட்டர் கூடுதல் மண்ணெண்ணெய் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…