“தாலிபான்களிடம் சிக்கிய கேரள பெண் யூடியூபர்”…. நடுவழியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… கதறிய அருணிமா…. ஆப்கானிஸ்தானில் பதறவைக்கும் சம்பவம்…!

Spread the love

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் கடுமையான ஆட்சிக்கிடையே, கேரளாவைச் சேர்ந்த பிரபல பெண் யூடியூபரும் பயண வழிகாட்டியுமான அருனிமா அங்கு சென்ற பயணம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் நிலவும் ஆப்கானிஸ்தானில், தனியாகப் பயணம் செய்வது பெரும் சவாலாக இருக்கும் சூழலிலும், அருனிமா அந்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்து வீடியோக்களைத் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வந்தார்.

பயணத்தின் இடையே பம்யான் மாகாணத்தில் இருந்தபோது, “அதிகாரப்பூர்வ அனுமதி கடிதம் இல்லாததால் நீங்கள் முஜாகிதீன்களால் கைது செய்யப்பட்டுள்ளீர்கள்” என்ற மெசேஜ் அருனிமாவிற்கு வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக இந்தியத் தூதரகத்தின் உதவியைக் கோரி தனது பேஸ்புக் பக்கத்தில் அந்த அவசரச் செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டைப் பதிவிட்டார். இச்சம்பவம் அவரது ஆதரவாளர்கள் மற்றும் நெட்டிசன்களிடையே பெரும் பதற்றத்தையும் கவலையையும் உருவாக்கியது.

ஆப்கானிஸ்தான் சட்டப்படி பெண்கள் தனியாகப் பயணிக்கத் தடையும், ஒவ்வொரு மாகாணத்திற்கும் தனித்தனி அனுமதி கடிதமும் தேவைப்படும். பெண் என்பதால் அனுமதி பெற முடியாமல் தனியாகப் பயணித்த அருனிமாவை முஜாகிதீன்கள் கைது செய்து விசாரணை நடத்தினர். அதிர்ஷ்டவசமாக, அங்குள்ள ஒரு உள்ளூர் நபரின் உதவியால் முஜாகிதீன்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, சில மணி நேரங்களிலேயே அருனிமா பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டார்.

முன்னதாக ஜலலாபாத் நகரிலும் தனியாகப் பயணித்ததற்காக அருனிமா கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவது முறையும்கூட அதேபோன்ற சூழலைச் சந்தித்து அவர் பத்திரமாக மீண்டுள்ள செய்தி, அவரது யூடியூப் பின்பற்றுபவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு விதிக்கப்படும் இந்த எல்லை மீறிய கட்டுப்பாடுகள், உலகளவில் மீண்டும் ஒருமுறை விவாதப் பொருளாக மாறியுள்ளன.

Nanthini

Recent Posts

இன்று இரவு 9:45 மணிக்கு கரண்ட் கட்?…. உங்க போனுக்கு இந்த மெசேஜ் வந்தா மக்களே உஷார்…. தமிழ்நாட்டில் தீயாய் பரவும் புதுவகை சைபர் மோசடி…. எச்சரிக்கை….!

"மின் இணைப்பு துண்டிக்கப்படும்" என போலி குறுஞ்செய்தி அனுப்பி, மின்சார வாரியத்தின் பெயரில் பொதுமக்கள் பணத்தைச் சூறையாடும் புதிய வகை…

5 minutes ago

“ஜெயலலிதா சொன்ன லேடியா? மோடியா? மறந்துபோச்சா?”…. அப்போ ரோஷம் வரலையா…. மரகதம் குமரவேலை வெளுத்து வாங்கிய புளூ சட்டை மாறன்….!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தற்போது தமிழக அரசியலில் சூடுபிடித்துள்ளது.…

15 minutes ago

கடற்கரையில் கிடந்த செல்போன், பைக்…. 30 மீட்டர் தொலைவில் சடலமாக மீட்கப்பட்ட கமலக்கண்ணன்… அதிர்ச்சி சம்பவம்…!

திருவொற்றியூர் சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் (35). தனியார் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த இவர், விநாயகர்…

20 minutes ago

லண்டனில் திடீரென ரத்தான முதலமைச்சர் விஜய் நிகழ்ச்சி…. சற்றுமுன் வெளியான அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி….!

லண்டன் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யைக் காண்பதற்காக, அவர் தங்கியுள்ள தேம்ஸ் நதிக்கரை ஓட்டல் எதிரே ஏராளமான தமிழக ரசிகர்கள்…

29 minutes ago

“அவர் அங்கே… இவர் இங்கே”… 52 வயதில் 2வது திருமணம் செய்த மாஜி மனைவியால் உச்சகட்ட பரபரப்பு….. லண்டனில் நடந்த ரகசிய திருமணம்….!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் தற்போது ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு அந்நாட்டுச் சிறையில்…

38 minutes ago

“அனாதை ஆசிரமத்துக்கு சொத்து”…. முதியவர் சொன்ன ஒற்றை வார்த்தை… அதிகாலையில் நடந்த கொடூரம்…. தாய், மகன் சேர்ந்து செய்த மன்னிக்க முடியாத காரியம்…!

சொத்துத் தகராறிலும் வாடகை பணப் பிரச்சினையிலும் ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் சொந்தக் குடும்பத்தாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம்…

46 minutes ago