Kerala CM Pinarayi Vijayan

சமூகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்… அந்த படத்தை தடை செய்ய வேண்டும் – கேரளா முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்!

By Elango on மாசி 20, 2026

Spread the love

கடந்த 2023ம் ஆண்டில் இயக்குனர் சுதீப் தோசென் இயக்கத்தில் வெளியான படம் தி கேரளா ஸ்டோரி. இரண்டு தேசிய விருதுகளை பெற்ற இந்த படத்தில் அதா ஷர்மா பிரதான கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்துக்காக இயக்குனர் சுதீப் தோசென் சிறந்த இயக்குனர் தேசிய விருது பெற்றார். முதல் பாகத்தின் அபார வெற்றிக்கு பிறகு இப்போது தி கேரளா ஸ்டோரி 2 என்ற டைட்டிலில் அந்த படம் 2ம் பாகமாக உருவாகியுள்ளது.

இந்த படத்தை காமாக்யா நாராயண் சிங் டைரக்ட் செய்துள்ளார். இதில் உல்கா குப்தா ஐஸ்வர்யா ஓஜா அதிதி பாத்தியா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்த படம் வரும் 27ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கேரளா ஸ்டோரி 2 படத்தை தடை செய்ய வேண்டும் என்று கேரளா மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

   

இதுகுறித்து பினராயி விஜயன் கூறுகையில், தி கேரளா ஸ்டோரி 2 சமூகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். முதல் பாகம் கேரள அரசுக்கு எதிராக வெறுப்பை பரப்பி மதச்சார்பின்மையை கெடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்டது. பரஸ்பர சம்மதத்துடன் நடக்கும் திருமணங்களை கட்டாய மதமாற்றத்திற்கு உதாரணமாக சித்தரித்து காட்டப்பட்டுள்ளது. எனவே இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.