இப்போதெல்லாம் டிவி சீரியல் நடிகைகள், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள், மார்க்கெட் இல்லாத சினிமா நடிகைகள் எனப் பலரும் இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் மாதம் பல லட்சங்களை சம்பாதித்து வருகின்றனர். குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் செலுத்தினால் மட்டுமே அவர்களின் பிரத்தியேக புகைப்படங்களையும், வீடியோக்களையும் பார்க்க முடியும் என்ற இந்த புதிய முறை இணைய உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சற்று கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து வீடியோக்களை வெளியிடும் இவர்களின் பதிவுகளைக் காணவே ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் தீவிரமாக இயங்கி வருகிறது.
இந்த வரிசையில், கேரளாவைச் சேர்ந்த அஷ்வானி என்ற இளம்பெண் இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரைப் மூலம் மட்டும் மாதத்திற்கு ரூ.85 லட்சம் வரை வருமானம் ஈட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இவரது பிரத்தியேக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்ப்பதற்காக சுமார் 21.4 ஆயிரம் பேர் மாதந்தோறும் ரூ.399 செலுத்தி தங்களை சந்தாதாரர்களாக இணைத்துக் கொண்டுள்ளனர். முன்னதாக, 28.3 ஆயிரம் சப்ஸ்கிரைபர்கள் மூலம் இவர் மாதம் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆன்லைன் வருமானத்தின் மூலம் பெரும் செல்வம் ஈட்டியுள்ள அஷ்வானி, கடந்த ஆண்டு மட்டும் அரசுக்கு ரூ.51 லட்சம் வரி செலுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக வலைதளங்களின் முறையான பயன்பாடும், கவர்ச்சிகரமான உள்ளடக்கங்களும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு எப்படி கோடிகளில் வருமானத்தைப் பெற்றுத் தருகின்றன என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த சான்றாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில், மாமியாரின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு ஆற்றங்கரையில் முகம் கழுவச் சென்ற மருமகனை ராட்சத முதலை…
அசாம் மாநிலம் திப்ருகரில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.4 லட்சம் பணத்தை இழந்த வாடகைதாரர் ஒருவர், தனது கடனை அடைப்பதற்காக வீட்டின்…
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்திலுள்ள பைதான் பகுதியில், பெற்ற தந்தையே தனது இரண்டு மகன்களைக் கால்வாயில் வீசிய கொடூரச்…
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றிய மியா அசெவெடோ கல்லார்டோ (20) என்பவர், 17 வயது…
பீகார் மாநிலம் பெட்டியாவில் பட்டப்பகலில் பிரபல நகைக்கடைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த 6 முதல் 8 பேர் கொண்ட மர்ம கும்பல்,…
திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் 80 வயது மூதாட்டி ஒருவர் நவம்பர் 16-ஆம் தேதி அதிகாலை 5.45 மணியளவில் இயற்கை…